தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஒருவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைடராக பணியாற்றி வந்த நெல்சன் விஜய் டிவியின் ஒல்லி பெல்லி, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர், ஒன் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குழுவில் பணியாற்றி வந்தார். இவர் முதன்முதலாக சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை எடுப்பதாக இருந்தது இந்த திரைப்படத்தின் பணிகள் துவங்கப்பட்டு படப்பிடிப்புகள் கூட நடைபெற்றது.
ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன்பின்னர் இவர் நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரது நண்பர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘டாக்டர்’ படத்தை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல இந்த பாடல்களின் மேக்கிங் வீடியோவில் இவர் அடித்த கூத்துக்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இயக்குனர் நெல்சன், மோனிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இதோ அவர்களின் புகைப்படம்.
டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது இவர் நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்கிவருகிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வடபழனியில் நடைபெற இருக்கிறது. அதே போல் வருகிற ஜூன் 21 ஆம் தேதி நெல்சனின் பிறந்தநாள். அதற்கு அடுத்த நாளான ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் தளபதி 65 படத்தின் டபுள் அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.