‘தளபதி 65’ படத்துக்கான ஒப்பந்தத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இதுவரை தமிழில் இயக்கிய அணைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் இயக்கிய சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து.
இதை தொடர்ந்து ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து முருகதாஸ் யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது விஜய்65 படத்தை முருகதாஸ் தான் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுவும் அந்த திரைப்படம் ‘துப்பாக்கி 2’ வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் விஜயை வைத்து இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்கார் என்று மூன்று படங்களை இயக்கிவிட்டார் முருகதாஸ். இ
ந்த மூன்று படங்களுமே மாபெரும் ஹிட் அடைந்தது. அதிலும் துப்பாக்கி படம் விஜயின் திரை வாழக்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருந்த்து. இந்த நிலையில் விஜய் 65 படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு விஜய்க்கு சம்பளமாக 70 கோடியும் முருகதாஸுக்கு சம்பளமாக வெறும் 10 கோடி மட்டும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தர்பார் படத்திற்கு லைகா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை மனதில் கொண்டு இந்த படத்தின் படஜெட்டை முருகதாஸ் குறைத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணி மீண்டும் 4-வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.