விஜய்யின் 66 வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் சமீபத்தில் தான் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி இருந்தது.
பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்றது. தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்புகள் இந்தியாவிலேயே திட்டமிடபட்டுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் 66 வது படத்தை யார் இயக்குவர்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.
இதையும் பாருங்க : சாகும் போது கூட என் போட்டோக்கு முத்தம் கொடுத்தான் – எஸ் பி பி குறித்து பேசிய இசைஞானி. சூசகமாக கலாய்த்துள்ள ஜேம்ஸ் வசந்தன்.
இந்த நிலையில் விஜய்யின் 66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தமிழில் ‘தோழா’, மகேஷ்பாபு நடித்த ‘மகரிஷி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘மகரிஷி’ திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் வென்றார் வம்சி. இவரும் விஜய்யும் இணையும் படம் பான்-இந்தியா படமாக உருவாக உள்ளது.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தளபதி விஜய்யின் அடுத்த படத்தை வம்சி இயக்க இருப்பதும், தில் ராஜ் தயாரிக்க இருப்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்புடன் வம்சி மற்றும் தில் ராஜு ஆகியோர்களுடன் தளபதி விஜய் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.