சர்கார் கதை திருட்டு விவகாரம்..!முதன் முறையாக பதில் அளித்த நடிகர் விஜய்..!

0
376
Vijay

சர்கார் படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதையை ஏற்கனவே எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும். அந்த கதையை திருடித்தான் ஏ ஆர் முருகதாஸ் சர்கார் படத்தை உருவாக்கி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

எழுத்தாளர்கள் சங்கத்தில் இயக்குனர் வருண் அளித்த புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சங்கம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் பஞ்சாயத்து பேசியுள்ளது. இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜும் பஞ்சாயத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த பிரச்சனை குறித்து முருகதாசுடம் பேசியுள்ள பாக்கியராஜ், இது உண்மையில் திருடப்பட்டதுதான் தான் என்றும் உடுத்திப்படுத்தினார்.

ஆனால், இந்த பிரச்சனை குறித்து நடிகர் விஜய்யிடம் பாக்கியராஜ் என்ன பேசியுள்ளார் என்றால், நான் இந்த பிரச்சனை குறித்து நடிகர் விஜய்க்கு போன் செய்த போது’இந்த பிரச்சனை குறித்து நான் செய்தியில் பார்த்த பின்னரே எனக்கு தெரியவந்தது. நீங்கள் தர்மசங்கடக எண்ணாதீரங்கள் இந்த பிரச்னையில் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் முருகதாஸ் சார் நீதிமன்றத்தில்பார்த்துக்கொள்ளட்டும் என்று விஜய் கூறியுள்ளார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.