விஜய் 63 எப்படி இருக்கும்.! முதல் முறையாக பேசிய விஜய்.! ஸ்வாரஸ்ய தகவல் இதோ.!

0
1192
Vijay-63
- Advertisement -

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாதா இந்த படத்தில்விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் சில நாட்களாக வெளியாகாமல் இருந்தது.

-விளம்பரம்-
Vijay-63

ஆனால் சமீபத்தில் இந்த படத்தை பற்றிய அப்டேட்டை விஜயே ஒரு உரையாடலின் போது கூறியுள்ளார். இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது என்று ஏற்கனவே வெளியான செய்தி தான். எனவே, இந்த படத்தில் விளையாட்டு துறையில் இருக்கும் அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதையாக இருக்கும் என்று பலரும் எண்ணி வந்தனர்.

இதையும் படியுங்க : விஜய் 63 யில் முதல் பாடலை பாடப்போவது இவர் தான்.! மீண்டும் சுதப்பும் ஏ ஆர் ரஹ்மான்.! 

- Advertisement -

விஜய் இறுதியாக நடித்த கத்தி மெர்சல் சர்க்கார் போன்ற படங்கள் அரசியல் மையப்படுத்தி எடுக்கப்பட்டது. எனவே, இந்தப் படத்திலும் அதே போன்ற கதைகளும் இருக்குமோ என்று ரசிகர்கள் கொஞ்சம் உச்சி கொட்டினர். ஆனால் இந்த படம் மிகவும் வித்தியாசமான தான் சமீபத்தில் நடிகர் விஜய் வெற்றி திரையரங்கில் உரிமையாளரை சந்தித்து பேசியபோது இந்த படத்தை பற்றி சுவாரசிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள விஜய், தளபதி 63 ஒரு கலர்ஃபுல்லான படம், இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் விரும்புவார்கள். நான் நடித்த கடைசி படங்கள் எல்லாம் கொஞ்சம் சீரியசாக போயிடுச்சு. அதுவும் படத்துல இந்த பிரஸ் முன்னாடி பேசறதெல்லாம் எனக்கு மிகவும் போர் அடித்து போயிடுச்சு’ என்று கூறியுள்ளார். எனவே, இந்த படம் விஜயன் முந்தைய படங்களைப் போல இதுவும் சீரியசாக இல்லாமல் அது ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

-விளம்பரம்-
Advertisement