கிளைமாக்ஸ் சரியில்லை என்று விஜய் விலகிய படம்.. போட்டோ ஷூட்டுடன் இதோ..

0
26871
vijay
- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் ” விஜய்”. இவரை “இளையதளபதி” என்று தான் திரையுலகமும், மக்களும் அழைப்பார்கள். மேலும்,விஜயை அடுத்த ‘சூப்பர் ஸ்டார் ‘ என்றும் அழைக்கிறார்கள். இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர்.மேலும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் கொண்டவர். மேலும் இவருடைய படங்கள் சினிமா துறைக்கு வருகிறது என்ற தகவல் அறிந்ததும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். மேலும், சமூக வலைத்தளங்களில் அவருடைய புகைப்படங்களும், போஸ்டர் ,பேனர் வைத்து பட்டையை கிளப்புறாங்க ரசிகர்கள்.தற்போது விஜய் அவர்களின் கால்ஷீட்டுக்காக பல்வேறு தயாரிப்பாளர்கள், பிரபலமான இயக்குனர்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Image result for unnai ninaithu

ஆனால், இப்படி சினிமா திரையுலகில் தெறிக்கவிட்டு , கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் விஜய் அவர்கள் சினிமா துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் அவருடைய சில படங்கள் தோல்வியில்தான் முடிந்தன.அந்த அளவு வெற்றி தரவில்லை. அதற்குப்பின் ” பூவே உனக்காக” படத்தின் மூலம் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது என்று கூட சொல்லலாம். இந்த படத்தில் விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த்,நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பின் தான் இவருடைய வாழ்க்கையே மாறியது என்று சொல்லலாம். ஆனா,ஆரம்ப காலத்தில் ஒரு கட்டத்துல பார்த்த விஜயை வைத்து படம் எடுக்க பல பிரபலங்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் யோசித்தார்கள்.மேலும், விஜய் அவர்கள் இந்த அளவிற்கு வாழ்க்கையில் உச்சத்திற்கு செல்வதற்கும் , மெஹா ஹிட் படங்களை கொடுத்து தூக்கிவிட்டதும் இயக்குனர் விக்ரமன் தான்.

இதையும் பாருங்க : இறுதியில் ஒன்றாக சந்தித்த வி ஆர் தி பாய்ஸ் குழு.. விஜய் டிவி வெளியிட்ட புதிய ப்ரோமோ..

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘உன்னை நினைத்து” படம் திரையரங்குகளில் வேற லெவல்ன்னு கூட சொல்லலாம்.மக்களிடையே அதிக வரவேற்பு பெற்ற படமாக மாறியது.இது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் ,இந்த படத்தில் நாம் அனைவரும் தெரிந்து இருப்பது சூர்யா, லைலா, சினேகா தான். உண்மையில் சொல்லப்போனால் இந்த படத்தில் விஜய் தான் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த விஷயம் பல பேருக்கு தெரியாத ஒன்று.இயக்குனர் விக்ரமன் விஜயிடம் இந்த படம் குறித்து கூறி ஒப்பந்தமும் செய்யதார். பின்னர் இந்த படத்திற்காக ஒரு சில காட்சிகள் விஜய் வைத்து எடுக்கப்பட்டு இருந்தனர்.

vijay
vijay

ஆனால், திடீரென்று விஜய் அவர்கள் இந்த படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை என்றும் , எனக்கு நடிக்க விருப்பமில்லை என்றும் கூறி விலகினார். அதற்குப் பின்னால்தான் சூர்யா அவர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆரம்பித்தார்.மேலும், இந்த தகவலை பல ஆண்டுகள் கழித்து நடிகை லைலா இது குறித்து கூறி உள்ளார்கள். மேலும் இவர்கள் இணைந்து படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விட்டார். அதுமட்டுமில்லாம விக்ரமன் அவர்கள் இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்ப நம்ம தளபதி நடிச்ச இருந்தா எப்படி இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement