இறுதியில் ஒன்றாக சந்தித்த வி ஆர் தி பாய்ஸ் குழு.. விஜய் டிவி வெளியிட்ட புதிய ப்ரோமோ..

0
4431
we are the boys
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்ததை ஓட்டி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். மேலு,ம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் மிஸ் செய்வதாகவும் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வி ஆர் தி பாய்ஸ் குழு மீண்டும் ஒன்றாக சந்தித்துள்ளது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாண்டி, முகேன், தர்ஷன், கவின் ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர். மேலும் , இந்த சந்திப்பில் ரியோ மற்றும் மா க பா ஆனந்த்தும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது, இதனால் வி ஆர் தி பாய்ஸ் குழுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு குரூப் அமைந்துவிடும். அந்தவகையில் இந்த சீசனில் வீ ஆர் தி பாய்ஸ் என்ற குரூப் அமைந்திருந்தது. இந்த குரூப் ஆரம்பிக்க முதல் காரணமே மதுமிதா மற்றும் கவின், தாண்டி இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம். மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது வீட்டின் ஆண்கள் பெண்களை பயன்படுத்துகிறார்கள் என்று கூற இதனால் கவின் குரூப்புக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மதுமிதாவை வெறுப்பேற்ற வீ ஆர் தி பாய்ஸ் என்ற குரூப்பை துவங்கியதோடு வி ஆர் தே பாய்ஸ் என்ற பாடலைக் கூட சாண்டி குரூப் எழுதி பாடியது. இந்த பாடல் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதையும் பாருங்க : கொழுக்முழுக் தோற்றத்தில் நகுல் மற்றும் தேவையானி.. சிறு வயதில் எப்படி இருகாங்க பாருங்க..

- Advertisement -

வி ஆர் த பாய்ஸ் குழுவில் சாண்டி கவின் தர்ஷன் முகென் கவின் மற்றும் லாஸ்லியா இருந்து வந்தார்கள். இவர்கள் அனைவருமே நிகழ்ச்சியின் இறுதிவரை இணைபிரியாமல் தான் இருந்து வந்தார்கள். ஆனால், இடையில் இவர்கள் குரூப்புக்கு ஒரு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் இவர்களது குரூப் பிரிந்தது என்று பலரும் கூறி வந்தனர். அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பின்னர் கூட இவர்கள் ஐவரும் இதுவரை ஒன்றாக சந்தித்ததும் இல்லை. தர்ஷன் மற்றும் முகென் ஒரு குழுவாகவும் சாண்டி மற்றும் கவின் ஒரு குழுவாகவும் லாஸ்லியா மற்றும் அபிராமி ஒரு குழுவாகவும் இருந்து வந்தார்கள். பிக் பாஸ் வீட்டில் ரத்தமும் சதையுமாக இருந்த வி ஆர் தி பாய்ஸ் குரூப் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சந்திக்கவே இல்லை, இருப்பினும் சமீபத்தில் சாண்டி, தர்ஷன், கவின்,முகென் ஆகிய நால்வர் மட்டும் ஒன்றாக சந்தித்து இருந்தார்கள். ஆனால், அப்போதும் லாஸ்லியா, இவர்கள் குழுவில் இல்லை இருப்பினும் லாஸ்லியா அபிராமி வனிதா சேரன் பாத்திமாபாபு என்று அனைவரையும் தனித்தனியாக சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

மேலும், சாண்டியின் நடன பள்ளிக்கு கூட லாஸ்லியா சென்றிருந்தார். அங்கே அவர் விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், இதுவரை வீ ஆர் தி பாய்ஸ் குழு ஒன்றாக இணைந்து எந்த ஒரு புகைப்படத்தையயோ, வீடியோவையோ வெளியிடவில்லை. தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவில் வி ஆர் தி பாய்ஸ் குழு மீண்டும் ஒன்றாக சந்தித்துள்ளது. இந்த சந்திப்பிலாவது லாஸ்லியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement