தமிழகத்தில் அன்றைய முதல்வர் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை – கேரள பெண் மரணத்தோடு சித்ரா மரணத்தை ஒப்பிட்ட நடிகை.

0
1423
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

- Advertisement -

ஆனால், ஹேமந்த் நிலை என்ன ஆனது என்று தற்போது தெரியவில்லை. சித்ராவின் மரணத்தை அனைவரும் மறந்தாலும் நடிகையும் சித்ராவின் நெருங்கிய தோழியுமான ரேகா நாயர் மட்டும் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்தை சித்ராவின் மரணத்தோடு ஒப்பிட்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார் ரேகா நாயர்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விஸ்மய நாயர் – சித்ரா இருவருக்கும் நடந்தது கிட்டத்தட்ட ஒரே போல் உள்ள நிகழ்வுதான். கேரளா காவல்துறை கேரளாவின் மந்திரிகள் கேரளாவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் சில அதிகாரிகளும் கேரளா முதல்வர் உட்பட எல்லோரும் இதற்கு முன்னெடுத்து அந்த மரணத்தை தீர விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சென்ற ஆட்சியில் இதைப்பற்றி எந்த பேச்சும் இல்லாமல் நடந்து முடிந்தது. விஷ் மாயாவின் பெற்றோர்களைப் போல சித்ராவின் பெற்றோர்களுக்கு மன தைரியம் இல்லை. தமிழகத்தில் அன்றைய காவல்துறையும் அன்றைய முதல்வரும் அன்றைய மந்திரிகளும் அப்படி தகுதி வாய்ந்தவர்களாக இல்லை. ஆனால் நிச்சயம் இனிவரும் நாட்களில் இதை தக்கபடி ஆராய்ச்சி செய்து தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளி தப்பித்து விடக்கூடாது இன்னும் பல பெண்களின் வாழ்க்கைக்கு ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் தமிழக காவல்துறை திகழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement