தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். நடிகர் சாந்தனுவை எல்லாருக்கும் தெரியும். ஏன்னா, இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளி வந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு. பிறகு இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார்.
அதைத் தொடர்ந்து ஆயிரம்விளக்கு, அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். நடிகர் சந்தானு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் விஜய் குடும்பமும் பாக்கியராஜ் குடும்பமும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்து வந்தனர். சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தந்தார். ஆனால், சந்தனுவோ, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான். என்று ட்விட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருந்தார்.
சாந்தனு சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் தளபதி விஜய்யின் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் சாந்தனு ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாந்தனு விஜய் தனக்கு அளித்த சில அறிவுரைகள் குறித்து கூறியுள்ளார்.
வீடியோவில் 6:05 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்
அந்த பேட்டியில் பேசிய அவர், விஜய் அண்ணா. அனைவரிடமும் சகஜமாகத் தான் பழகுவார். அவருக்கு உங்களைத் தெரியும் என்றால் இன்னும் ஜாலியாக பழகுவார். அவரை நான் ஒரு சகோதரனாகத் தான் பார்க்கிறேன். அவரிடம் பணப்பிரச்சினை, படப்பிரச்சினை என அனைத்தையுமே பகிர்ந்து கொள்வேன். அப்படி ஒரு முறை கூறும் போது, நண்பா, வாழ்க்கையில் இதெல்லாம் இல்லாமல் எப்படி நண்பா. இதெல்லாம் தாண்டி வந்தால் தான் நினைத்த விஷயம் கிடைக்கும். மனதைத் தளர விடாதே என்று என் தோளை தட்டி கொடுத்து பேசினார் என்று கூறியுள்ளார்.