மறுபடியும் விஜய், அஜித்துக்கு பிளாஷ்பேக் ஹீரோயினாக நடிக்க ஆசை என்று நடிகை கீர்த்தனா கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய்க்கு முதன் முதலாக ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தனா. விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம். இந்த படம் மூலம் தான் விஜய் அவர்கள் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதே போல் இந்த படத்தில் தான் கதாநாயகியாக கீர்த்தனா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் தொலைக்காட்சி தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் அன்பே வா, ரோஜா, வித்யா நம்பர் 1, திருமதி ஹிட்லர், அக்னி நட்சத்திரம், வாடி ராசாத்தி போன்று பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தனா அவர்கள் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர் அஜித், விஜய் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் ஐந்து வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். ஒரு ஸ்டேஜில் நான் பரதநாட்டியம் ஆடியதை பார்த்து தான் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வந்தது. நான் முதன்முதலாக தெலுங்கில் தான் நடித்தேன். அதற்குப் பிறகு தான் தமிழில் நாளைய தீர்ப்பு படத்திற்காக வாய்ப்பு வந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நான் 32வது கதாநாயகியாக தேர்வானேன்.
எனக்கு முன்னாடி 31 பேர் ஆடிசஷனுக்கு வந்தார்கள். பின் அவர்கள் எல்லாம் வேண்டாம் என்று ரிஜெக்ட் பண்ணிவிட்டார்கள். அதற்குப் பிறகு தான் 32வது கதாநாயகியாக நான் செலக்ட் ஆனேன். அதேபோல் எனக்கு எப்போதும் கேமரா பயம் எல்லாம் இல்லை. சினிமா துறையில் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். என்னுடைய பதினாறாவது வயதிலேயே நடிக்க வந்ததால் ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. படிப்படியாக கற்றுக்கொண்டேன். தெலுங்கு, மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தெலுங்கு மலையாளம் என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போது அஜித்துடன் சேர்ந்து பவித்ரா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சீரியலுக்கு வந்த காரணம் :
இதுவரை நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும், எனக்கு பர்சனலாக என் மனதிற்கு ரொம்ப பிடித்த படம் என்றால் பவித்ரா தான். அந்த படத்தை என்னால் இன்னும் மறக்க முடியாது. மேலும், நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அக்ஷயா என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சீரியலில் நடிக்கும்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டதால் குடும்பத்திற்காக கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டேன். அதேபோல் கொரோனா லாக்டவுனில் நிறைய சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்போது தமிழிலேயே பல சீரியல்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
விஜய், அஜித் பிளாஷ்பேக் ஹீரோயினாக நடிக்க ஆசை :
அதுமட்டுமில்லாமல் என்னுடைய முகம் பாஸிட்டிவ் கதாபாத்திரத்திற்கு மட்டும்தான் பொருந்தும் என்பதால் என்பதை மாற்றி அழகான வில்லியாக நடித்து கொண்டு இருக்கிறேன். சீரியலின் மூலமாகவும் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மறுபடியும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அதேபோல் மறுபடியும் விஜய், அஜித் பிளாஷ்பேக் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.