படத்தில் தான் வில்லன். ஆனால், நிஜத்தில் ஹீரோ. கொரோனா பாதிப்புக்கு இவர் செய்த உதவியை பாருங்க.

0
7631
saidheena
- Advertisement -

நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்த்துறை என அனைத்தும் துறையும் தங்களுடைய உயிரை பணய வைத்து போராடி வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை 1397 பேர் பாதிக்கப்பட்டும், 34 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதும் கடைகள்,பொது இடங்கள், போக்குவரத்துகள், சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தலை தூக்கி உள்ளது.

- Advertisement -

இதற்காக சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள். இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்டண்ட் நடிகர் தீனா அவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உணவிற்காக தவித்து வரும் மக்களுக்கு மளிகை சாமான்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

நடிகர் தீனா அவர்கள் மக்களுக்கு மளிகை பொருட்கள் கொடுக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகர் தீனாவுக்கு பாராட்டு மழையை குவித்து வருகின்றனர். இவரை போன்று சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா,பிரகாஷ் ராஜ், பிரபாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொரோனவினால் உலக மக்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கை உடன் இருப்பது மட்டும் தான்.

நடிகர் தீனா அவர்கள் முதலில் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக தான் அறிமுகமானார். பின் கமல் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா. விருமாண்டி படத்திற்கு பின்னர் இவர் பல படங்களில் நடித்து உள்ளார்.

Advertisement