படத்தை பார்த்துவிட்டு கார்த்திக்கு ஷாக் கொடுத்த விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா.?

0
1709
vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக் தற்போது இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வரும் “கடைக்குட்டி சிங்கம் ” என்ற படத்தில் நடித்துள்ளார் .நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Karthi-Kadaikutty-Singam
இந்த படத்தை பற்றிய கருத்துக்களை தெரிந்துகொள்ள நடிகர் கார்த்திக் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்கள் படத்திற்காக நடிகர் விஜய்யிடம் பாராட்டை பெற்றுள்ளீர்களா ?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி ” விஜய் சார் பருத்திவீரன் படத்தை பார்த்துட்டு செமயா இருந்துச்சுயா” என்று கூறியதாகவும், மேலும் ‘கொம்பன் படத்தை பார்த்து விட்டு படம் நன்றாக இருந்ததாக பாராட்டியதாகவும் ‘ நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் பாராட்டிய இந்த இரு படமும் நடிகர் கார்த்திக்கின் திரை வாழ்க்கையில் ஒரு தரமான படமாக அமைந்தது.

vijay actor

மேலும், நடிகர் கார்த்திக் சமீபத்தில் நடித்துள்ள “கடைக்குட்டி சிங்கம்” படமும் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு படங்கள் போலவே ஒரு நல்ல கிராமத்து கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை13) வெளியான இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த அபிமானத்தை பெற்று வருகிறது என்பது குறிப்படத்தக்கது.