படு வைரலாகும் தளபதி 62 படத்தின் விஜய்-கீர்த்தி சுரேஷ் புகைப்படம்.! போட்டோவை நீக்கிய படக்குழு

0
1359
vijay

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் தனது 62 வது படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது.

vijay-62

இந்த படத்தில் விஜயுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் தான். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் கதை , படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செட்டின் புகைப்படங்கள் வரை வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. அதில் கீர்த்தி சுரேஷ் ஒரு சோபாவிலும், விஜய் தரையில் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது.

இந்த படத்தின் தகவல்கள் குறித்து படக்குழு ரகசியம் காத்து வந்த நிலையில் இந்த புகைப்படம் வெளியானது படக்குழுவிற்கு சற்று அதிர்ச்சியளித்தது. ஆனால், இந்த புகைப்படத்தை, விஜய் 62 படத்தில் பணிபுரிந்து வரும் ஸ்டைலிஷ் தான் அனுமதி இல்லாமல் வெளியிட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ பின்னர் அதனை நீக்கிவிட்டனர்.