காதலில் நாங்க இரண்டாவது வகை – தளபதி விஜய் பழைய பேட்டியில் ஓபன் டாக்.

0
2045
vijay-sangeetha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் எடுக்கப்பட்டது. அப்போது ஐடி ரெய்டு வந்து விஜய்யை விசாரிக்க அழைத்து சென்றது. பின் எந்த ஆவணமும் விஜய்யிடம் இல்லை என்று அறிவித்தார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த செய்தி தமிழகமெங்கும் காட்டுத்தீயாய் பரவி புரட்சி ஆகவே மாறியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு வாரமாக விஜய் பேச்சு தான். இந்த பிரச்சனை முடிவடைந்து மீண்டும் தளபதி விஜய் அவர்கள் படத்தின் படப்பிடிப்புக்கு வந்து தன் ரசிகர்களுடன் சிரித்துக்கொண்டு செல்பி எடுத்தார். பிரச்சினை முடிந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இன்று காதலர் தினத்தன்று விஜய் அவர்களிடமிருந்து காதலர் தின வாழ்த்து மெசேஜ் ஏதாவது வருமா?? என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு வந்த காதலர் தினத்தன்று விஜய்யும் அவரின் மனைவி சங்கீதாவும் பிரபல இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்கள். தற்போது அவர்கள் அந்த பேட்டியில் கூறிய சில விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த பேட்டியில் விஜய்யும் அவரது மனைவி சங்கீதா அவர்களும் கூறியிருப்பது, பொதுவாகவே காதலித்து கல்யாணம் செய்பவர்கள் முதல் வகை. கல்யாணம் பண்ணிட்டு காதலிப்பவர்கள் இரண்டாம் வகை. அதில் நான் இரண்டாம் வகை என்று தன் காதல் குறித்து விஜய் பேசத்தொடங்கினார்.

- Advertisement -

நான் கல்யாணம் செய்து கொண்டு தான் காதலிக்க தொடங்கினேன். எல்லாருமே எதிர்பார்க்கிறது அம்மா மாதிரி பொண்ணு வேணும் தான். அதே மாதிரி தான் எனக்கும் கிடைத்தார்கள் சங்கீதா. பாசம், கோபம், கனிவு, கண்டிப்பு, காதல் எல்லாமே எனக்கு கொடுத்தார்கள். உடனே விஜய் நான் பேசுவது விட அவர்கள் சொன்னால் நல்லாயிருக்கும் என்று சங்கீதாவிடம் சொன்னார். சங்கீதா அவர்கள் பேசத்தொடங்கினார், எங்களுடைய கல்யாணம் அரேன்ஜ் மேரேஜ் தான். விஜய் அவர்கள் பார்ப்பதற்கு பெரிய ஸ்டாராக இருந்தாலும் எந்த ஒரு பந்தா காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுவார். இந்த குணம் தான் இவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ரொம்ப கலாட்டாவான, துறுதுறுப்பாக ஏதாவது பண்ணிட்டு இருப்பேன். அவர் அப்படியே எனக்கு நேரெதிர் ரொம்ப அமைதி. எங்கள் இருவருக்கும் பிடித்துப் போய் தான் கல்யாணம் செய்து கொண்டோம்.

அவர் என்னை பார்க்கும்போதெல்லாம் ஓரக்கண்ணால் ரொமாண்டிக் சிக்னல் மெசேஜ் கொடுப்பார் என்று சொல்லி இருக்கும் போது விஜய் அவர்கள் பேசினார்,நான் ஒன்னும் இவர்களுக்கு சிக்னல் தரல. நீங்க தான் கொடுத்தீங்க. அதுக்கு பின்னால தான் ஓகே சொன்னேன் என்று புன்னகையுடன் விஜய் சொன்னார். இப்படி இருவரும் மாறி மாறி தங்களுடைய காதலை அழகாக பகிர்ந்து கொண்டார்கள். பின் விஜய் அவர்கள் கடைசியாக எல்லாரையும் விட என்னை இந்த அளவிற்கு உயர்த்த வைத்தது காதல் தான். அதாவது என் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் காதல் தான். எனக்கு சினிமாவில் இருக்கிற காதல் என் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கிற காதல் இன்னும் தொடர வேண்டும் என்று பேச்சை முடித்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னால் இவர் பேசிய தகவல் தற்போது இன்று காதலர் தினத்தன்று வெளியாகி உள்ளது. இதனை பார்த்து தளபதி ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement