விஜய், சூர்யா கூட நடிக்கும் போது எனக்கு வெறும் 12 வயசு தான் – விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பகீர் பேட்டி.

0
3946
surya

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், சூர்யா. இவர்கள் இருவரும் சினிமா உலகில் வளர்ந்து வரும் காலங்களில் இணைந்து பல படங்களில் நடித்து உள்ளார்கள். அந்த வகையில் இவர் இருவரும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான படம் “பிரண்ட்ஸ்”. இந்த படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆகும். இந்த படத்தை அப்பச்சன் அவர்கள் தயாரித்து இருந்தார்கள். மேலும், இந்த பிரண்ட்ஸ் படம் மலையாள திரைப்படத்தை தழுவி வந்தது. இந்த படத்தில் தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி, வடிவேலு, ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகையும் நடன இயக்குனருமான அபிநய ஸ்ரீ இந்த படம் பற்றிய சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார் .

This image has an empty alt attribute; its file name is image-49.png

80, 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சியிலும், குணச்சித்திர வேடத்திலும், படங்களில் கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை அனுராதா. இவருடைய மகள் தான் நடிகை அபிநயஸ்ரீ. நடிகை அபிநயஸ்ரீ திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடன இயக்குனரும் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழில் பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் நடித்து உள்ளார். இந்நிலையில் இயக்குனர் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் சூர்யா, விஜய் இணைந்து நடித்த படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படத்தில் நடிகை தேவயானியின் சகோதரியாக நடிகை அபிநயஸ்ரீ நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகை அபிநயஸ்ரீ அவர்கள் விஜய்யை ஒருதலை காதல் செய்யும் பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு 13 வயது தான் ஆகியிருந்தது. இது குறித்து சமீபத்தில் இவர் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது எனக்கு 13 வயது தான் ஆனது. அதனால் என்னுடைய அம்மா அனுராதா அவர்கள் படத்தில் நடிக்க கூடாது என்று தடுத்தார்கள். நான் அடம் பிடித்து தான் விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன்.

நான் வயதிற்கு வந்த 4, 5 மாதத்திலேயே அந்த படத்தில் நான் நடித்திருந்தேன் பலரும் நான் மிகவும் பெரிய பெண் என்றுதான் நினைத்தார்கள் அவர்களுக்கு எல்லாம் நான் மிகவும் சின்ன பெண் என்பதை சொல்ல விரும்பினேன் என்று கூறியுள்ளார் அபிநயா. பிரண்ட்ஸ் படத்திற்கு பின்னர் இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து இருந்தார். மேலும், இவர் பல படங்களுக்கு நடன இயக்குநரககவும் பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement