சிவகுமாரின் ஒரு மடியில் விஜய், இன்னொரு மடியில் சூர்யா – வைரலாகும் சிறு வயது புகைப்படம். (ஒரு குட்டி ஸ்டோரியுடன்)

0
6847
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா இருவரும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் என்ற படத்திலும், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பிரண்ட்ஸ் என்ற படத்திலும் நடித்து இருந்தார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. 1998 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பிரியமுடன். இந்த படத்தில் விஜய், கௌசல்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜய் அவர்கள் ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்சில் விஜய் இறந்துவிடுவார்.

-விளம்பரம்-
Vijay and Suriya viral Childhood pic throwback with actor Sivakumar

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் வின்சென்ட் செல்வா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, இந்த படத்தில் விஜய்கு எதிரான கதாபாத்திரத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பில் சூர்யாவை நடிக்க வைக்க கொஞ்சம் யோசித்தார்கள். அதனால் சூர்யா சார்கிட்ட இந்த படத்தின் கதையைச் சொல்லவில்லை. இருந்தும் இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. அதே மாதிரி இந்த படம் முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் விஜய் நடித்தார்.

- Advertisement -

அப்போது எந்த ஹீரோவும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவில்லை. எல்லாரும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க யோசித்தார்கள். ஆனால், விஜய் சார் துணிச்சலாக நடிக்க ஒத்துக்கிட்டார். நான் முதலில் விஜய் அவர்களிடம் கதை சொல்லி முடித்துவிட்டு சூர்யா சார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்து வைத்து இருக்கிறேன். நீங்கள் பாசிட்டிவ் கேரக்டர் பண்றீங்களா என்று கேட்டேன். ஆனால், இந்தப் படம் பண்ணா நான் நெகட்டிவ் கேரக்டர் தான் பண்ணுவேன் என்று விஜய் சார் உறுதியா இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is surya.jpg

நாங்கள் எதிர் பார்த்ததை விட இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்று கூறினார். மேலும், பிரியமுடன் படம் வெளியாகி 22 ஆண்டுகள் முடிவடைந்தது. இருந்தாலும் இந்த படத்தின் கதை மக்கள் மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை. கடந்த ஆண்டு கூட இந்த படத்தை சிங்கள மொழியில் ரீமேக் செய்து வெளியிட்டு இருந்தார்கள். இதுவரை இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் விஜய் சூர்யா இருவரும் சிவகுமாருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement