கிஸ் மிஸ்சிங்ன்னு விஜய் சார் சொன்னாரு. முத்த ஸ்டோரி சொன்ன மாஸ்டர் பட பிரபலம்.

0
2321
master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் இவர் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு தன் அன்பு முத்தத்தை கொடுத்து உள்ளார் விஜய் சேதுபதி. பொதுவாகவே கூகுள் புகைப்படத்தில் விஜய் சேதுபதி தன் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் அதில் அனைவருக்கும் முத்தம் கொடுத்து இருப்பார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் முத்தம் கொடுத்திருப்பார்.

இதையும் பாருங்க : ரெட் லைட் ஏரியாவில் போலீசார் நடத்திய ரெய்டில் சிக்கிய இரண்டு நடிகர்கள்.

இதனை தொடர்ந்து அடுத்து வருபவர்களும் அதை பின்பற்ற தொடங்கி விட்டார்கள். இந்த பட்டியலில் தற்போது விஜய்யும் இணைந்து இருக்கிறார். ஆனால், இந்த அழகிய தருணம் எப்போது ?எப்படி ? நடந்தது என்பதை இந்த படத்தின் கலை இயக்குனர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், அந்த அற்புத நிகழ்வு என்னுடைய பிறந்தநாள் அன்று தான் நடந்தது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு 129 வது நாளில் நிறைய பேருக்கு பிறந்தநாள் வந்தது ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் அன்று என்னுடைய பிறந்தநாள் அன்று விஜய் மற்றும் விஜய் சாருக்கு ஒன்றாக நடிக்கும் காட்சிகள் இருந்தது எனக்குத் தெரியாமலேயே 37 கிலோ கேக் தயார் செய்து வைத்திருந்தார்கள். என்னை கேக் வெட்டச் சொல்லி பிறந்தநாள் வாழ்த்துக் கூறி விஜய் சார் தான் முதலில் பாட ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

பின்னர் கேக் வெட்டி முடித்தவுடன் விஜய் சாருக்கும் விஜய் சேதுபதி சாருக்கும் கொடுத்தேன். அப்போது ‘கிஸ் மிஸ்ஸிங்’ என்று விஜய் சார் சொல்ல விஜய் சேதுபதி சார் எனக்கு முத்தம் கொடுத்தார். அதன் பின்னர் எல்லோருக்கும் நான் கேக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அப்போது திடீர் என்று கத்தினார்கள் என்ன ஏது என்று திரும்பிப் பார்த்தபோது விஜய் சேதுபதி சார் விஜய் சாருக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். ரெண்டு பேரும் என் பிறந்த நாள் திருவிழாவாக மாற்றிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement