2000 ரூபா நோட்ட விட்டு மொத்தமா புடிச்சிடலாம்னு நெனச்சாங்க – Demonetisation குறித்து விஜய் ஆண்டனி சொன்ன நச் பதில்.

0
1774
Vijayantony
- Advertisement -

பிச்சைக்காரன் படம் குறித்தும் பண மதிப்பிழப்பு குறித்தும் வைரலாகும் விஷயம் குறித்து விஜய் ஆண்டனி பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் பிச்சைக்காரன்.இந்த படம் வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றியடைந்தது. பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கிருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வெளியாகியிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் வெளியான நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற இருக்கும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

அதாவது, பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தில் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்தால் ஊழலை ஒழிக்கலாம் என்று சொல்லி இருப்பார்கள். அதன் பிறகு நவம்பர் மாதமே பிரதமர் மோடி 500 ரூபாய் நோட்டுகளுக்கு இந்தியா முழுவதும் தடை செய்திருந்தார். இதனால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு இருந்தார்கள். வங்கி வாசல்களில் மக்கள் கூட்டமும் அலைமோதி இருந்தது. இதனை அடுத்து தற்போது வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணப்படுவதை குறியீடாக காட்டுவார்கள்.

இந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப வாங்குவதாக அறிவித்திருக்கிறது.பொதுவாக, சூர்யா படத்தில் வரும் சம்பவங்கள் தான் நிஜ வாழ்க்கையில் நடைபெறும் என்று ரசிகர்கள் கூறி மீம்ஸ் போட்டு இருந்தார்கள். ஆனால், தற்போது விஜய் ஆண்டனி படத்தில் வரும் காட்சிகளும் நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விஜய் ஆண்டனி ஒரு தீர்க்கதரிசி என்று நெட்டிசன்கள் பலர் மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் ஆண்டனியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ‘தொடர்ச்சியாக நடக்கவில்லை நான் இந்த விஷயத்தை திட்டமிட்டு தான் பண்ணேன். பிச்சைக்காரன் 1லயே இதைத்தான் சொன்னேன் ஆனால் அது நடக்க இவ்வளவு நேரம் ஆகிவிட்டது பத்து ரூபாய் நோட்டாக இருந்தால் அது கள்ள நோட்டாக வராது என்று சொன்னேன்.

ஆனால் அரசாங்கம் அதை மறைத்து வைத்துவிட்டு 2000 ரூபாயாக மாற்றி வைத்து விட்டார்கள். அப்படி செய்யும் போது நான் வருத்தப்பட்டேன். என்னடா இது நாம் சொன்னது இது இல்லையே என்று, ஆனால் அப்போதே பிளான் செய்து 2000 ரூபாய் நோட்டுகளை நிறைய பேர் வாங்கி இருப்பார்கள் மொத்தமாக பிடித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், இதைப் பற்றி பெருவாரியாக பேசும் யாரும் பாதிக்கப்படவில்லை. உங்களிடம் யாரிடமாவது 2000 நோட்டு இருக்கிறதா ? கடைசியா எப்போ அந்த நோட்ட பாத்தீங்க. அதனால் நாம் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் பெரிய பெரிய பிக்கிலிங்க தான் பாதிக்கப்பட்டு இருக்காங்க என்று வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.

Advertisement