மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு, இளையராஜாவை சந்தித்து இதை செய்திருக்கலாம்- விஜய் ஆண்டனி

0
101
- Advertisement -

இளையராஜா குறித்து படவிழாவில் விஜய் ஆண்டனி கூறி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைத்து துவங்கி இருக்கிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. மேலும், இளையராஜாவின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாக இளையராஜா இசை காப்புரிமை குறித்த சர்ச்சை இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, இளையராஜா உடைய பாடல்களை எக்கோ அண்ட் அகி ஆகிய பாடல்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தன்னுடைய பாடல்களை எக்கோ, அகி ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

- Advertisement -

இளையராஜா குறித்த சர்ச்சை:

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்ற பிறகு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது. இளையராஜாவுக்கும் இசை பாடல்கள் மீதும் தனிப்பட்ட தார்மீக சிறப்புரிமை இருக்கிறது என்று 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருந்தும் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் உடைய தீர்ப்பு ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஓத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இளையராஜா-மஞ்சுமோல் பாய்ஸ் சர்ச்சை:

இப்படி இருக்கும் நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த பாடலை பயன்படுத்தி இருப்பதால் அந்த படத்தினுடைய தயாரிப்பாளர் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டு இருக்கிறார். இதற்கு படத்தினுடைய தயாரிப்பாளர், குணா படத்தின் கண்மணி அன்போடு பாடலுக்கு அந்த படத்தினுடைய தயாரிப்பாளரிடம் உரிய முறையில் அனுமதி பெற்று தான் பயன்படுத்தி இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி பேட்டி:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மழை பிடிக்காத மனிதன் படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான சர்ச்சை குறித்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், ராஜா சாரோட கம்பெனியில் உள்ள பாடல்களும் அவர் தான் உரிமையாளர். மஞ்சு போல் பாய்ஸ் படத்தை பொறுத்தவரை படக்குழுவினர் இளையராஜாவிடம் கேட்டிருக்கலாம். படம் வெற்றி பிறகு படக்குழுவினர் கமல் சாரை சந்தித்தது போல இளையராஜாவையும் சந்தித்து இருந்தால் இந்தளவிற்கு பிரச்சனை சென்றிருக்காது.

மஞ்சுமேல் பாய்ஸ் படம் :

மேலும், படம் வெற்றிக்குப் பிறகு படக்குழுவினர் இளையராஜாவை மரியாதை நிமித்தமாய் பார்த்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த மஞ்சுமேல் பாய்ஸ் படத்தை சிதம்பரம் தான் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்த படம் பெற்று இருக்கிறது.

Advertisement