உன் எண்ணம் எவ்வளவு தூரமோ வாழ்க்கை அவ்வளவு தூரமே- விஜய் ஆண்டனி தொகுத்து வழங்கும் முதல் டிவி நிகழ்ச்சி

0
287
- Advertisement -

விஜய் ஆண்டனி புதிதாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே சின்னத்திரை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலுமே வித்தியாசமான கதைகளத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். பெரும்பாலும், ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் விஜய் டிவிக்கு ஒரு தனி மவுஸ் உண்டு.

-விளம்பரம்-

தற்போது மற்ற சேனல்களுமே ரியாலிட்டி நிகழ்ச்சிகளை புதிய கான்செப்டில் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் புதிதாக மகா நடிகை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் ஆண்டனி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இரவு 8.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது.

- Advertisement -

மகாநடிகை நிகழ்ச்சி:

தற்போது இது தொடர்பான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், உன் வாழ்க்கையில் நீ எதை அடைய நினைத்தாலும் உன் மீது நீ அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கும் பொழுது அது நடக்கும், நடந்தே தீரும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகமில்லை. உன் எண்ணம் எவ்வளவு தூரமோ உன் வாழ்க்கையும் அவ்வளவு தூரமே, எனவே எப்பொழுதும் மனதை உறுதியாக வைத்திரு.

நிகழ்ச்சி ப்ரோமோ:

உங்கள் கனவுகள் எல்லாம் நினைவாக மாற உங்கள் எதிர்காலம் நட்சத்திரமாய் ஜொலித்திட மகா நடிகைகளைத் தேடி உங்களுடன் எனது பயணம் என்று விஜய் ஆண்டனியின் குரலில் இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கமெண்ட் போட்டு விடுகிறார்கள்.

-விளம்பரம்-

கதாநாயகி சீரியல்:

இன்னும் சிலர், இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கதாநாயகி நிகழ்ச்சியின் பிரதிபலிப்பாக இருக்குமோ என்று கூறுகிறார்கள். ஆனால், எதுவாக இருந்தாலும், நிகழ்ச்சி வெளிவந்த பிறகு தான் தெரியும். இந்த நிகழ்ச்சி என்ன கான்செப்ட் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான புது நிகழ்ச்சி தான் யார் அடுத்த கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கே எஸ் ரவிக்குமார், ராதிகா சரத்குமார் இருந்தார்கள்.

விஜய் ஆண்டனி குறித்த தகவல்:

இது கதாநாயகி தேடும் பயணம். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இதில் கலந்து கொண்ட பல பேருக்கு சினிமா, சீரியல் என்று வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து தற்போது பிரபலமான நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருந்த மழை பிடிக்காத மனிதன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

Advertisement