தன்னுடைய காதல் திருமணம் குறித்து விஜய் ஆண்டனி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிச்சைக்காரன் 2.
விஜய் ஆண்டனி திரைப்பயணம்:
இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவியும் பிச்சைக்காரர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொலை. இந்த படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
படம் ப்ரோமோஷன் பணி:
தற்போது இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தான் விஜய் ஆண்டனி அவர்கள் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி அவர்கள் தன்னுடைய காதல் திருமணம் குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர், சுக்ரன் படம் ரிலீஸ் ஆன போது தான் பாத்திமா எனக்கு போன் செய்து பாராட்டினார். சில மணி நேரம் அவர் உடன் பேசி இருந்தேன். பின் அவர் வீட்டிற்கு வரச் சொல்லி என்னை அழைத்தார். அப்போது அவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தார்.
திருமணம் குறித்து சொன்னது:
என்னுடைய அம்மாவுடன் எளிமையாக பேசினார். எனக்கு அவரை காதலிக்கலாம் என்று தோன்றியது அதற்குப்பின் அவருடைய வீட்டிற்கு நான் சென்றேன். உங்கள் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கிற எண்ணம் இருந்தால் அதில் என்னுடைய பெயரை சேர்த்து விடுங்கள் என்று சொன்னேன். உடனே அவர் சிரித்தார். அதன் மூலம் அவருக்கும் என்னை பிடித்தது தெரிய வந்தது. அதற்கு பிறகு நாங்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியிருந்தார்.
விஜய் ஆண்டனி மனைவி குறித்த தகவல்:
மேலும், விஜய் ஆண்டனி மனைவி சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் நடித்த காபி நிறுவன விளம்பரபடத்தின் புகைப்படம் ஒன்றும் வைரலாகு வருகிறது. திருமணத்திற்கு பின் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா அவர்கள் தயாரிப்பு பணிகளை பார்த்து கொள்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கின்றனர். விஜய் ஆண்டனியை ஒரு பெரிய நடிகராக வரவழைக்க வேண்டும் என்பது பாத்திமாவின் ஆசை. அதற்கு தேவையான நல்ல படங்களை எல்லாம் அவர் தேர்வு செய்து கொடுப்பாராம். இவர் விஜய் ஆண்டனி நடித்த பல படங்களை தயாரித்துள்ளார். இதுவரை 7 தமிழ் படங்களையும் 3 தெங்லுகு படங்களையும் தயாரித்துள்ளார் பாத்திமா. அதுபோல் விஜய் ஆன்டனி எப்போதும் தனது இந்த வெற்றிக்கு காரணம் தனது மனைவி தான் என்று எப்போதும் கூறி வருவார்.