விபத்தில் சிக்கிய ரசிகர்கள் -கண்டுகொள்ளாமல் சென்றாரா விஜய்? – பனையூரில் பரபரப்பு

0
327
vijay
- Advertisement -

விபத்தில் சிக்கிய ரசிகர்களை விஜய் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தின் முதல் பாடல் :

இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்நிலையில் விபத்தில் சிக்கிய ரசிகர்களை விஜய் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் மக்கள் இயக்கம்:

அதாவது, விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்திக்க விஜய் சேர்ந்திருக்கிறார். இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்களும், அவருடைய ரசிகர்களும் குவிந்திருந்தார்கள். விஜய் தன்னுடைய நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூருக்கு காரில் புறப்பட்டு இருக்கிறார்.

விபத்தில் சிக்கிய ரசிகர்கள்:

அப்போது அவரை காண்பதற்காக அவருடைய இல்லத்திற்கு வெளியே காத்திருந்த ரசிகர்கள் அவருடைய காரை பின்தொடர்ந்து பனையூர் வரை சென்றிருந்தனர். அப்போது பனையூர் அருகே வரும்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் விஜயின் வாகனத்தை வேகமாக விரட்டி இருந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் இந்த வாகனத்தை ஓட்டி சென்றவருக்கு காதிலும், பின்னால் அமர்ந்தவர்க்கு கை மற்றும் கால் முட்டியிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தலை கவசம் அணிந்து இருந்தால் பெரிய அளவு காயம் ஏற்படாமல் தப்பித்திருந்தனர்.

கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்:

ஆனால், வாகனம் மிக மோசமாக சிதைந்து போயிருக்கிறது. விபத்து நடந்ததை பார்த்த பின்பும் விஜய் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருந்தது அங்கு இருந்தவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஒருவருடைய காரை அனுமதியில்லாமல் இப்படி பின் தொடர்ந்து செல்வது தவறாக இருந்தாலும் காயமடைந்தவர்களை பார்த்து விஜய் காரை நிறுத்தாமல் செல்வது தவறு என்று கூறி வருகின்றனர். இன்னொரு சிலர், விஜய் காரை நிறுத்தி கவனித்து இருந்தால் இன்னும் அந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement