‘வெளியான அரபிக் குத்து பாடலின் போஸ்டர்’ எப்படி இருக்கு விஜய் – பூஜா ஹேக்டே ஜோடி.

0
374
beast
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடிசூடா மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் நடிப்பில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக ‘பீஸ்ட்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

- Advertisement -

நெல்சன் – சிவர்கார்த்திகேயன் கூட்டணி:

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் முதல் சிங்கள் பாடல் ஏற்கனவே குறித்த ப்ரோமோ வீடியோ எல்லாம் வெளியாகி இருந்தது. நெல்சன் – சிவர்கார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படத்தில் சிவர்கார்த்திகேயன் செல்லமா’ பாடலும் ‘ஓ பேபி’ பாடலும் சிவகார்த்திகேயன் தான் எழுதி இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே பாணியில் பீஸ்ட் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் பாடலுக்கு அரபிக் குத்து என்று பெயரிடப்பட்டு உள்ளது.

அரபி குத்து பாடலின் போஸ்டர்:

மேலும், இந்த அரபிக் குத்து பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவின் இறுதியில் சிறிய கிலிம்ப்ஸை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த அரபி குத்து பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா என்று இருவரும் இணைந்து ரொமான்டிக் நடனம் ஆடியுள்ளார்கள். தற்போது அந்த பாடலின் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

-விளம்பரம்-

அரபி குத்து பாடல் வெளியீடு:

அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கிறது. மேலும், இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை விஜய் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் அரபி குத்து பாடலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டும் இல்லாமல் கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு பாடல் ஓன்று பீஸ்ட் படத்தில் வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனிருத் ரீமேக் பாடல்:

பொதுவாகவே அனிருத் அவர்கள் தன்னுடைய பாடல்களை ரீமேக் செய்து வெளியிடுவதில் கைதேர்ந்தவர். அதே போல் சமீப காலமாக நடிகர்கள் நடித்த படங்களின் பாடல்களை ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறார். இதற்கு சிலர் விமர்சித்து வந்தாலும் அந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அனிரூத் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகுதா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement