பைக் ஸ்டண்ட்டில் மாஸ் காட்டினாரா விஜய் ? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.

0
12122
vijaybigil

தமிழ் சினிமா உலகில் புகழ் வாய்ந்த நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் தளபதி விஜய். தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. மாநகரம், கைதி போன்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Image result for Vijay Bigil Bike

இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் பட நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

- Advertisement -

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தும் அதனுடைய பேச்சுக்கள் இன்னும் குறையவில்லை. தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரே விஷயம் மாஸ்டர் படத்தின் டிரைலர் மட்டும் ரிலீஸ் தேதி தான். இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் அவர்கள் ஒரு பைக் சேசிங் காட்சியில் நடித்து இருப்பார். தற்போது அந்த காட்சி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆனால், அந்த காட்சியில் இருப்பது விஜய் தானா என்பது தெரியவில்லை. கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் பிகில். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் சும்மா சரவெடியாக அதிர விட்டது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யப்பட்டது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய் அவர்கள் ஒரு பைக் சேசிங் காட்சியில் நடித்து இருப்பார். தற்போது அந்த காட்சி சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் உண்மையாகவே தளபதி விஜய் தான் நடித்தார் என்பது உறுதியாகி உள்ளது. அந்த யூ வளைவில் வளையும் போது தளபதி அப்படியே ஒரு பைக் ரேசர் போல் செய்து உள்ளார். மேலும், தளபதி ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

பொதுவாகவே படங்களில் தல அஜித் தான் கார், பைக் ஸ்டன்ட் காட்சிகளில் உண்மையாகவே பண்ணுவார். உண்மையிலேயே தல அஜித் ஒரு சிறந்த கார், பைக் ரேசர். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தற்போது விஜய் அவர்களும் தன்னுடைய படத்தில் முதன் முதலாக பைக் ரேஸ் காட்சியில் நடித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் அனைவரும் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement