குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக மாஸ் காட்டுபவர் தளபதி விஜய். இன்று விஜய்யின் பிறந்தநாள். பொதுவாகவே ஜூன் 22ஆம் தேதி அன்று தமிழ்நாடே கோலாகலமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் கொரோனா பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் இருப்பதால் மக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விஜய் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போனது. இருந்தாலும் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவருடைய ரசிகர்கள் எப்போதோ ஆரம்பித்து விட்டார்கள். விஜய் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சோசியல் மீடியாவில் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு கொண்டாடி வருக்கிறார்கள்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள படத்தின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 1985 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, பாக்கியராஜ், செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.இந்த படம் முழுக்க முழுக்க சமூக அநீதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் அறிமுக பாடலின் போது தளபதி விஜய் அவர்கள் நடித்து இருப்பார். தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போதே சுப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் விஜய். தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.