கல்லூரி பேருந்தில் விஜய் – மாஸ்டர் படத்தின் டெலீட்டட் காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்த ரம்யா.

0
1272
ramya
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) நெல்சன் பிறந்தநாளில் வெளியானது. அதே போல இரண்டாம் போஸ்டர் விஜய் பிறந்தநாளான இன்று இரவு 12 மணிக்கு வெளியானது.

இதையும் பாருங்க : எனக்கு நெருக்கமானவாங்க ‘மாலு’னு கூப்புடுவாங்க. ஆனால், தனுஷ் என்னை செல்லமா இப்படி தான் கூப்பிடுவார் – மாளவிகா மோகனன்.

- Advertisement -

இன்று விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல்வேரு பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய் யின் மாஸ்டர் படத்தில் நடித்த ரம்யா, மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட டெலீட்டட் காட்சியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் ரம்யா. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இந்த காட்சி படத்தில் வரவில்லை.

இந்த காட்சிக்காக தயாரான விதம் ஒரு நாள் முழக்க பாஸ்ஸில் நடந்த படப்பிடிப்பை மறக்க முடியுமா என்று மாளவிகா மோகனனை டேக் செய்து இருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பின்னர் ரம்யா, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘சங்கத்தலைவர்’ படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் ஆடை 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement