சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது – கிண்டி மருத்துவர் சம்பவம் குறித்து விஜய் கண்டனம்

0
118
- Advertisement -

கிண்டி அரசு மருத்துவர் மீதான தாக்குதல் குறித்து நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் அரசு மருத்துவர் பாலாஜி பணியாற்றி வருகிறார். இவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரேமா என்பவருடைய மகன் கத்தியால் குத்திருக்கிறார். இதனால் அவர் படுகாயம் அடைந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், மருத்துவரை தாக்கிய அந்த நபரை போலீஸ் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. பின் இந்த சம்பவம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியை சந்தித்து நலமும் விசாத்திருக்கிறார்.

- Advertisement -

கிண்டி மருத்துவர் தாக்குதல் சம்பவம்:

இப்படி பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியிருக்கும் சம்பவம் தொடர்பாக பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

விஜய் அறிக்கை:

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

-விளம்பரம்-

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறி இருக்கிறார்.

நெட்டிசன்கள் ட்ரோல்:

தற்போது விஜயின் இந்த பதிவு இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதில், நீங்க சினிமாவில் பண்ணத தான் ஒருத்தன் உண்மையிலேயே பண்ணிட்டு இருக்கான். அதனால சினிமாவுல நல்ல விஷயங்களை காட்டுங்க என்றும் , குத்துனவன பத்தி ஒருவார்த்த கூட சொல்லலையே சிஎம் சார் என்றும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Advertisement