விஜய் சிகிரெட் பிடிச்சா கேக்குறீங்க..! இத பாராட்டமாட்டீங்களா.?விஜய்க்கு ஆதரவாக பேசிய பேரரசு.!

0
1286
Vijay
Vijay
- Advertisement -

நடிகர் விஜய்யை வைத்து “திருப்பாச்சி, சிவகாசி என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் பேரரசு சமீபத்தில் சர்கார் படத்தின் போஸ்டர் குறித்து எழுந்துள்ள விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் வெளியான “சர்கார்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

sarkar

- Advertisement -

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து “சர்கார்” படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இருந்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நீக்கியது.

இந்நிலையில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சமீபத்தில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு 70 லட்ச ரூபாயை நிதியுதவி செய்தார் நடிகர் விஜய், அதை யாரும் பாராட்டவில்லை.

-விளம்பரம்-

vijay flood

ஆனால், விஜய் புகைபிடிப்பது போல போஸ் கொடுத்துவிட்டார் கண்டனம் செய்த பலர் விஜய் நல்லது செய்ததை மட்டும் ஏன் பாராட்டவில்லை. முதலில் அவரது நல்ல குணத்தை பாராட்டுங்கள். சினிமா காரர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்று கூறும் அரசியல் வாதிகள் கேரளாவிற்கு உங்களுடைய கையில் இருந்து எவ்வளவு லட்சம் கொடுத்தீரகள் என்று சரமாரியான பல கேள்விகளை கேட்டுள்ளார் இயக்குனர் பேரரசு.

Advertisement