மணிமேகலையை திருமணம் செய்து கொண்ட ஹீசனையும் பாராட்டியுள்ளார் விஜய் – எதற்கு ?

0
1800

தளபதி விஜய் எப்போதும் நல்ல திறமைகளுக்கு மதிப்பளித்து தயங்காமல் பாராட்டக் கூடியவர். பீட்ஸா படம் வந்த போது கார்த்திக் சுப்புராஜ், ராஜா ராணி படம் வந்தபோது அட்லீ சமீபத்தில் ஒரு திரைக்கலைஞர் என திறமைகளை பாராட்ட எப்போதும் தயங்குவதில்லை.

அப்படி தான் சமீபத்தில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலையை திருமணம் செய்து கொண்ட நடன இயக்குனர் ஹீசனையும் பாராட்டியுள்ளார் விஜய். மெர்சல் படத்தின் மெர்சல் அரசன் பாடலுக்கு துணை நடன இருக்குனராக இருந்தவர் ஹுசைன்.

அந்த பாடலுக்கு துணை நடன இயக்குனராக பணியாற்றிய போது, ஹுஸைனிடம் நீங்கள் இன்னும் நன்றாக வரவேண்டும், இன்னும் சில காலத்தில் உங்களை வேறு ஒரு இடத்தில் பார்க்க வேண்டும் எனக் கூறினார் விஜய்.

இதனை, சமீபத்திய ஒரு பேட்டியில் கூறினார் ஹுசைன். மேலும், அந்த பாராட்டு அப்போது எனக்கு ஊக்கமளித்தது எனவும் கூறினார்.