நிச்சயம் வரை சென்று நின்றுபோன திருமணம் – தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ரஷ்மிகாவுக்கு திருமணமா ?

0
886
rashmika
- Advertisement -

‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரு பாடல் மூலம் இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். தற்போது தென்னிந்திய சினிமா உலகில் நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். பின் இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா நடித்த படங்கள்:

அதேபோல் விஜய் தேவேர்கொண்டாவும் தமிழ்,தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்றைய இளைஞர்களின் ரீல் ஜோடியாக விஜய் தேவர்கொண்டா – ராஸ்மிகா திகழ்கிறார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகாவுக்கும் நிச்சயதார்த்தம் ஆகி இருந்தது. பின் 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவருடைய திருமணம் நிச்சயதார்த்தத்தில் முடிந்துவிட்டது. உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்திருந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா பற்றிய செய்திகள்:

அதற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். மேலும், விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா உடைய காம்பினேஷனில் வந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று எல்லாம் கூறினார்கள். அதோடு இவர்கள் வெளியில் ஒன்றாக சுற்றும் போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்கிறார்கள் என்று வதந்திகள் எல்லாம் பரவியது.

-விளம்பரம்-

திருமணம் குறித்து விஜய் தேவர்கொண்டா சொன்னது:

அது மட்டுமில்லாமல் இந்த ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறுவார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இதற்கான பதிலை மறைமுகமாக விஜய் தேவர்கொண்டா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இருவருக்கும் கல்யாணம் முடிவாக உள்ளது. எனவே பரவிய வதந்திக்கு ‘நான்-சென்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார். விஜய் தேவர்கொண்டா பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே போல் ராஸ்மிகாவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றி கேட்டபோது,

திருமணம் குறித்து ராஸ்மிகா சொன்னது:

எனக்கு தெரியவில்லை. திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இன்னும் வயதாகவில்லை. நான் அதைப்பற்றி யோசிக்க வில்லை. ஆனால் கம்போர்ட் ஆக வைத்து கொள்பவராக அமைய வேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்திருந்தார். இதிலிருந்து இவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இருவருமே பாலிவுட்டிலும் கால்தடம் பதிக்க உள்ளார்கள். தற்போது இருவரும் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்கள்.

Advertisement