தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்றார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. விஜய் வீட்டில் நடந்த ஐடி விசாரணை குறித்து வலை பேச்சு பிரபலம் ஒருவர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியது, பிகில் படம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை பெற்று இருக்கிறது. விஜய் வீட்டில் நடந்த ஐடி விசாரணைக்கு சொல்லப்பட்ட காரணம் என்னவென்றால், விஜய்யின் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த காரணத்தினால் தான் விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது அபத்தமான(பொய்) செய்தி.

இதையும் பாருங்க : 8 வருட காதல், அளவுக்கு மீறிய லவ். இறுதியில் காதலர் குறித்து போட்டுடைத்த பிரியா பவானி.

Advertisement

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வசூல் ரீதியில் பெரிய ரெக்கார்ட் செய்து இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் ஐடி விசாரணை நடந்தது இல்லை. இந்த மாதிரி விஜய்யை குறி வைத்து செய்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவருடைய படங்களில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்களும், காட்சிகளும் பேசப்பட்டு வருவதனால் தான் இந்த பிரச்சனை நடக்கிறது. விஜய்க்கு இப்ப இருக்கிற மக்கள் கூட்டமும், ரசிகர் கூட்டமும் அதிகம். லட்சகணக்கான ரசிகர்களை கொண்டவர் விஜய். ஒரு நடிகர் மத்திய அரசுக்கு எதிராக பேசிவருவதனால் பாஜக அரசு விஜய்யை அடக்குவதற்காகவும்,அச்சுறுத்துவதற்காகவும் தான் இந்த ஐடி விசாரணை நடந்தது. அப்படித் தான் எனக்கு தோணுது.

Advertisement

இந்த ஐடி ரெய்டு விஜய்யோட அரசியலுக்கு தொடக்கமாக கூட இருக்கும். கடந்த கால அரசியல் பற்றி பார்த்தீங்கன்னா, அரசியலில் வந்தவங்க சிலபேர் ஐடி விசாரணையில் இருந்து வந்தவர்கள் தான். இதே மாதிரி தான் ஒரு முறை எம்ஜிஆர் வீட்டிற்கு ஐடி ரைட் நடந்தது. அதன் அடிப்படையில் தான் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு நெருக்கடியை தான் தற்போது விஜய்க்கு கொடுத்திருக்கிறார்கள். விஜய் வீட்டுக்கு ஐடி விசாரணை வந்ததை வைத்து அரசியல் வாதிகள் பேசுவதெல்லாம் பின்னாடி அவர் அரசியலுக்கு வந்தால் அவர்களுடைய கட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் கணக்கு போட்டு அவர்கள் பேசுகிறார்கள். இது விஜய் மீது உள்ள அக்கறையினால் பேசுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவருக்கு லட்சக்கணக்கான மக்களின் ஆதரவும் இருக்கிறது என்று கூறினார்.

Advertisement