பாரு இல்லனா மூ*** இரு. டாஸ்மாக் திறக்க ப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சாந்தனுவை திட்டி தீர்த்த விஜய் ரசிகர்- அதற்கு அவர் கொடுத்த பதில்.

0
5952
shanthanu
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல தமிழ் பட நடிகர் சாந்தனு போட்ட ட்வீட் ரசிகர் ஒருவரை கடுப்பாக்கி உள்ளது. ஊரடங்கு காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த மதுபானக் கடையை மீண்டும் திறக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஆந்திர பிரதேஷ் பார்டர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி-யில் மதுபானம் வாங்குவதற்காக தமிழ்நாடு மக்களும் சென்று கூட்டமாக வரிசையில் நிற்கும் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோ பதிவை பார்த்த நடிகர் சாந்தனு, ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் வீட்டில் இருக்காமல் இப்படி பண்றீங்களே என்ற ரீதியில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதற்கு விஜய் ரசிகர் ஒருவர் “பெரிய போராளின்னு மனசுல நினைப்பு போல.. உன்ன மாதிரி இங்க எல்லார்கிட்டயும் பணம் இல்ல வீட்ல உட்கார்ந்து சாப்பிடுவதற்கு.. அவன் அவன் சாப்பிட காசு இல்லாம எதாச்சும் ஒரு ரீசனுக்காக தான் வெளியே போறான்.. நீ அதை வீட்ல உட்கார்ந்து டிக் டாக் பண்ணிக்கிட்டு குத்தம் சொல்லிட்டு இருக்க.. கொஞ்சம் வெளிய வந்து எவ்ளோ பேரு காசு இல்லாம கஷ்ட படுறாங்கன்னு பாரு இல்லனா மூடிட்டு இரு.. சும்மா சும்மா தினமும் ட்வீட் போட்டுட்டு” என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அந்த ட்வீட்டை பார்த்த சாந்தனு “பிரதர்.. ஃபர்ஸ்ட் நான் சொன்னதுல என்ன தப்பு கண்டீங்கனு தெரியல.. ஆனா, நான் என்னோட ட்வீட்டை டெலிட் பண்ணிட்டேன். ஏன்னா, சமூக வலைத்தளத்துல சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்ல.. நின்னா தப்பு உக்காந்த தப்பு.. ரெண்டாவது நான் பணக்காரனா இல்ல மிடில் கிளாஸான்னு நீங்க முடிவு பண்ணாதீங்க.. எவ்ளோ பேரு கஷ்ட படுறாங்கன்னு எனக்கும் தெரியும். நான் அதை பத்தி ஒண்ணுமே சொல்லல.. மூணாவது, வீட்ல வேலை இல்லாம உட்கார்ந்து நீங்க என்ன பொருளாதார பட்ஜெட்டா போடுறீங்க? நான் டைம் பாஸுக்காக டிக் டாக் பண்ணேன்.. நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன?” என்று அந்த விஜய் ரசிகருக்கு பதில் கூறியிருந்தார்.

Advertisement