போன் செய்து விஜய் இதை தான் சொன்னார் – பாலாவின் அக்கா கணவரின் பேட்டி இதோ.

0
1026
bala
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விருதை இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மேலும் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ரசிகர் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த பாலா. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இறப்பதற்கு முன்னால் பாலா தலைவன் படம் பார்க்காமலே போறேன் என்று விஜய்யை டேக் செய்து ட்வீட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

இறப்பதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி பாலா போட்ட ட்வீட்கள் இவை, நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா அந்த கடவுளுக்கு கூட பிடிக்காது போல. என்ன வாழ்க்கைடா. எதுக்கு பொறக்கணும் ,யாருக்காக நாம வாழனும் ,அப்போ அப்போ சந்தோஷத்தை கொடுத்து பரிச்சிகிட்டே இருக்கான் அந்த கடவுள் இதுக்கு மேல என்னால முடியாதுடா மொத்தமா போயிடரன் அப்போவாது எந்த கவலையும் இல்லாம இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் பாலாவின் குடும்பத்தினரை விஜய் தொடர்பு கொண்டு பேசியதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக ஒரு செய்தி பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பாலாவின் அக்கா கணவர் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியபோது, பாலாவிற்கு அவரது அப்பா இறந்ததில் இருந்தே மன அழுத்தத்தில் தான் இருந்தான். மேலும், வேலை இல்லாதது, அவனுடைய படிப்பு சான்றிதழ்கள் எரிந்து போனது என்று அவனுக்கு எத்தனையோ கவலைகள் இருந்தது. இவை எல்லாம் சேர்ந்து தான் அவனை இப்படி பண்ண வைத்து விட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், தங்களுக்கு பாலாவின் நண்பர்கள் கால் செய்தார்கள், அதே போல விஜய்யும் என் மனைவிக்கு (பாலாவின் அக்கா) கால் செய்து, அவன் இப்படி செய்யலாமா? இது ரொம்ப தப்பாச்சே. தற்கொலை தீர்வாகுமா? என்று கேட்டார். மேலும், என்னுடன் நீங்கள் ஏன் அவரை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்று சொன்னார். உங்கள் துக்கத்தில் நான் பங்கெடுத்துக்கொள்கிறேன் என்றும் விஜய் கூறியதாக சொல்லியுள்ளார் பாலாவின் மாமா.

-விளம்பரம்-
Advertisement