தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் ‘தளபதி’ விஜய். பொதுவாகவே இரண்டு முன்னணி நடிகர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கின்றது என்றாலும், அவர்களின் ரசிகர்கள் இடத்தில் அது இருக்காது. அதுவும் சமூக வலைத்தளம் தான் அவர்கள் மோதிக் கொள்ளும் இடமாக இருக்கும்.

தினேஷ் பாபுவும் (வயது 22, ரஜினி ரசிகர்)

ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்றொரு நடிகரை பற்றி இழிவாக பேசி பதிவிட வேண்டியது. அந்த நடிகரின் ரசிகர்கள் இன்னொருவரை தாழ்த்தி பேசும் வகையில் ஒரு ஹேஸ் டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் ட்ரெண்டு செய்ய வேண்டியது என இந்த மாதிரியான பிரச்சனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. இவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களின் ஆதர்ச நாயகர்களே பல முறை சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், ரசிகர்கள் அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

Advertisement

இப்போது இரண்டு ரசிகர்களுக்கிடையே இருந்த மோதல் ஒரு மரணத்தில் வந்து முடிந்திருக்கிறது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண பணிகளுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து வந்தனர். அப்போது, முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் ஏன் இன்னும் நிதியுதவி கொடுக்கவில்லை என்று பலர் பல விதமாக கேள்வி எழுப்பிய வண்ணமிருந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் ‘தளபதி’ விஜய்யும் கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதியுதவி வழங்கினார்.

யுவராஜும் ( வயது 22, விஜய் ரசிகர் )

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், சந்திக்காப்பான் கோயில் தெருவில் வசிக்கும் யுவராஜும் ( வயது 22, விஜய் ரசிகர்), அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தினேஷ் பாபுவும் (வயது 22, ரஜினி ரசிகர்) நண்பர்களாம். நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில் ‘கொரோனா’ நிவாரண பணிகளுக்கு யார் அதிகம் நிதியுதவி வழங்கியது ரஜினியா? விஜய்யா? என்ற வாக்குவாதம் எழுந்திருக்கிறது. பின், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு தினேஷ் பாபு, யுவராஜை வேகமாக கீழே தள்ளியிருக்கிறார். இதனால் யுவராஜிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தினேஷ் பாபுவை கைது செய்தனராம்.

Advertisement
Advertisement