படப்பிடிப்பை காண சென்ற ரசிகர்களுக்கு அடி உதை.! இரண்டு பேர் காயம்.! வீடியோ இதோ.!

0
608
- Advertisement -

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாதா இந்த படத்தில்விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் சில நாட்களாக வெளியாகாமல் இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்றது. தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அடிக்கடி படிப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சிலபுகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றது.

இதையும் படியுங்க : தளபதி 63யில் விஜயை முதலில் பார்த்ததும் விஜய் இதை தான் சொனார்: பூவையர்.! 

- Advertisement -

சமீபத்தில் கூட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகின. தற்போது இந்த படத்தின் வட சென்னைசுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது, எனவே, படப்பிடிப்பை காண அங்கே தினமும் பல ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு கடற்கரையில் நடந்துள்ளது.இதனை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு கூட கூட்டம் அலைமோதியுள்ளது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement