தளபதி 63யில் விஜயை முதலில் பார்த்ததும் விஜய் இதை தான் சொனார்: பூவையர்.!

0
1306
Poovaiyar
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், சென்னை பாஷை பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து வரும் குழந்தை நட்சத்திரம் பூவையார் தான். தற்போது இவர் விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார்.

Vijay-63

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் வருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பரியேறும் பெருமாள் புகழ் கதிர், காமெடி நடிகரான விவேக், யோகிபாபு போன்றவர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூப்பர் சிங்கர் பூவையர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு பாடலையும் பாடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் போது விஜய்யை சந்தித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார் பூவையர். இதுகுறித்து பேசியுள்ள அவர், நல்லா பாடுற அதை விட நல்லாவே எல்லாரையும் கலாய்க்கிற, இப்படியே போனால் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்துக்கு வருவ என்று விஜய் கூறியதாக பூவையர் மிகவும் புன்னகையுடன் கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement