பத்திரிகையாளர் சந்திப்பின் போது கோகோ – கோலா பாட்டில்களை ரொனால்டோ கொஞ்சம் தள்ளி வைத்ததால் அந்த நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.உலக கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.  2020 ஆம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த வாரம் ஐரோப்பாவில் தொடங்கியது. கடந்த 15 ஆம் தேதி இந்த தொடரில்  நடப்பு சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் ஹங்கேரி அணியும் மோதினர். 

இந்த போட்டிக்கு முன்பாக காலையில் நடக்கும் வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட ரோனால்டோ, தனக்கு முன்னாள் கோக்க-கோலாவின் பாட்டில்கள் வைக்கப்பட்டு இருப்பதை கண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ கோக்க-கோலா பாட்டில்களையும்  எடுத்து கீழே மறைத்துவைத்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து ‘’தண்ணீர் குடியுங்கள்’’ என்றார்.ரொனால்டோவின் இந்த செயலால் கோக கோலாவின் ஷேரின் மதிப்பு மலமலவனே சரிந்துள்ளது.

இதையும் பாருங்க : அக்கா உங்க சைஸ் என்ன ? அதோட கலர் என்ன ? பச்சை பச்சையான கேள்விகளுக்கு பச்சை பச்சையாக பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு.

Advertisement

இதனால் கோக கோலா நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 29,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கோக கோலாவை எதிர்க்கும் ரொனால்டோ ஏற்கனவே கோக கோலா விளம்பரத்தில் நடித்தவர் தான். இதே போல தான் நடிகர் விஜய்யும் கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு கத்தி படத்தில் கோலா நிறுவனத்திற்கு எதிராக வசனம் பேசி இருப்பார். தற்போது இந்த ரெண்டு சம்பவத்தையும் ஒப்பிட்டு பல மீம்கள் உலா வருகிறது.

இந்த நிலையில் கத்தி படம் வெளியான பின்னர் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் விஜயிடம் கொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்தது குறித்து கேட்ட கேள்வியின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது அந்த பதிவில் விஜயிடம் அந்த ரசிகர் இதற்கு முன்னால் கொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு தற்போது கத்தி படத்தில் அதற்கு எதிராக பேசுகிறீர்களே இதற்குப் பெயர் என்ன என்று கேட்கிறார்.

Advertisement

அதற்கு பதிலளித்துள்ள விஜய் அதை நான் இப்போது செய்வது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்னுடைய தவறுகளை திருத்திக் கொள்கிறேன் சாதாரண மனுஷன் தான் நானும் என்று கூறியுள்ளார் அதேபோல அந்த பொருட்களை இனி நான் விளம்பரப் படுத்த மாட்டேன். கத்தி படத்தின் கதையை நான் கேட்ட போதே எனக்கு இது தோன்றிவிட்டது. எனவே ஜீவா கதாபாத்திரம் மூலமாக நான் அதை சொன்னேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும், ஆம் நானும் இது போன்ற விளம்பரங்களில் இதற்கு முன்னால் நடித்தவர்தான். இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பிரபலங்களான சச்சின்,அமீர்கான் போன்றவர்கள் கூட இதற்கு தூதுவர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் அரசியல் பிரபலங்களை கேள்வி கேட்க ஆரம்பிக்கும் முதல் ஆளாக நான் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement