விஜய் பிறந்தநாளுக்கு நெல்சன் வாழ்த்து சொல்லி போட்ட பதிவை கண்ட விஜய் ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றனர் . கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தின் வெற்றிப் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இறுதியாக இயக்கிய பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் அவரை பலரும் கலாய்த்து தள்ளினர். இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் நெல்சனை கலாய்த்து பல விதமான மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய அணைத்து படங்களும் வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருக்கிறது.
சொதப்பிய பீஸ்ட் :
விக்ரம் படம் ஓடியதற்கு நெல்சனை கலாய்க்க முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் விஜய்யின் தீவிர ரசிகர். பீஸ்ட் படம் எடுப்பதற்கு முன்னாள் அவர் கண்டிப்பா ஒரு Fan Boy சம்பவத்தை செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் தான். எனவே, அவரும் கமலை வைத்து ஒரு தரமான Fan boy சம்பவத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை நிறைவேற்றி இருக்கிறார் லோகேஷ்.
வைரலான நெல்சன் வீடியோ :
இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் நெல்சனை திட்டி தீர்த்து வருகின்றனர்.பீஸ்ட் திரைப்படத்திற்கு பின்னர் விருது விழா ஒன்றில் பங்கேற்ற நெல்சனை, மேடையில் ஆடும்படி பூஜா ஹேக்டே கூறி இருந்தார். அதற்கு நெல்சன் ‘அவங்கள இப்படி மாட்டிவிட்டா என்ன இப்படி மாட்டி விட்ருவாங்க’ என்று சொல்ல மேடையில் இருந்த பிரியங்கா ‘நீங்க யார்னா மாட்டிவிடுங்க’ என்று சொன்னார். அதற்கு நெல்சன் ‘ஏற்கனவே நான் நல்லா மாட்டி இருக்கேன், நான் பேசமா கீழ போய் ஒக்காந்துக்குறேன்’ என்று பேசியுள்ளார்.
பொதுவாக நெல்சன் படத்தை போல நிஜத்திலும் நெல்சன் ஜாலியான ஒரு நபர் தான். அவர் அளித்த பல பேட்டிகளில் அவர் மிகவும் ஜாலியாக தான் பேசுவார். அவ்வளவு ஏன் டாக்டர் படத்தின் பாடல் வெளியிட்டுக்கு முன்பு பாடலுக்காக அவர் செய்த ப்ரோமோ வீடியோக்கள் எல்லாம் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்தின் தோல்வியால் தான் நெல்சன் இப்படி பேசி இருக்கிறார் என்று இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். .
வருத்தப்படும் நெட்டிசன்கள் :
இப்படி ஒரு நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்சன், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் சார். உங்களின் கனிவு, நம்பிக்கை, உத்வேகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. என் வாழ்க்கையில் என்னுடைய நண்பனாகவும், அண்ணனாகவும் நலன் விரும்பியாகவும் இருப்பதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
நெல்சனின் ஜெயிலர் :
நெல்சனின் இந்த பதிவை பார்த்த பல விஜய் ரசிகர்கள் நெல்சனிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே பீஸ்ட் படம் வெளியானதில் இருந்தே நெல்சனை விஜய் ரசிகர்கள் பலர் கேலி செய்து இருந்தது தான். தற்போது நெல்சன், ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். பீஸ்ட் படத்தில் விட்டதை இந்த படத்தில் நெல்சன் நிச்சயம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘