விஜய் படங்கள் தேசிய விருதுகளில் பரிந்துரைக்கப்படாததற்கு காரணம் இதானா ? ரசிகர்கள் கேள்வி.

0
46628
- Advertisement -

விஜய் படங்கள் ஏன் தேசிய விருதுகளில் பரிந்துரைக்கப்படுவது இல்லை என்று சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆண்டு தோறும் தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருது பட்டியலில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்த்திபன் இயக்கி தயாரித்து அவரே நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்குட்டிக்கு விருது என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனருக்கும் படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது. தேசிய விருது வென்ற தனுஷ், விஜய் சேதுபதி, இமான் ஆகியோருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் விஜய்யின் எந்த படங்களும் தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளார்கள் சமீபத்தில் கார்த்திக் தயானந்த் என்பவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்ரீட் ஒன்றை செய்திருந்தால் அதில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை விஜயின் எந்த படங்களும் தேசிய விருது வெல்லப் போவது இல்லை என்று பதிவிட்டிருந்தார்

-விளம்பரம்-

இவரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக விஜய்யின் கத்தி, பிகில் போன்ற படங்கள் தேசிய விருது பெற்றிருக்க வேண்டிய படம் என்றும். ஆனால், அனைத்து அரசும் விஜய்க்கு எதிராக இருப்பதால் விஜயின் எந்த ஒரு படங்களையும் தேசிய விருந்திற்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை என்று புலம்பி வருகிறார்கள்.

அதேபோல பிகில் திரைப்படம் பல பெண்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. ஆனால், இந்த படத்திற்கு கூட ஏன் தேசிய விருது எந்த பிரிவிலும் அறிவிக்கப்படவில்லை என்று கூறிவருகிறார்கள். பிகில் படத்தில் இடம்பெற்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிடித்தது. அதேபோல கடந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அசுரன் பட இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷுக்கு தான் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு தேசிய விருது வழங்கப்பட்டிறருக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்ககது.

Advertisement