விஜய் ரசிகர்கள் ஒரு லைக்கிற்க்கு 8 ரூபாய் அளிக்கிறார்களா ? ஆதாரத்தை காட்டிய மகேஷ் பாபு ரசிகர்கள் . யூடுயூப் அளித்த விளக்கம்.

0
15883
Vijay
- Advertisement -

டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அதிலும் 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் அவர்கள் தெலுங்கில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தார். இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோகளில் ஒருவராகிவிட்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதது.

-விளம்பரம்-

மேலும், 400 கோடிகளுக்கு மேல் இந்தப் படம் வசூல் செய்தது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அவர்கள் தற்போது இளம் இயக்குனர் ஒருவரின் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. போதுவாக தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி சமூக வலைதளத்தில் பனிப்போர் நடத்துவது வழக்கம் தான். அந்த வகையில் சமீபத்தில்பிரபாஸின் ரசிகர் ஒருவர் மாஸ்டர் டீஸர் சாதனையை விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாநகரம், கைதி போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதேபோல கைதி படத்தில் தனது குரலால் அசத்திய அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா, மோகனன், சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ல் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியகாது என்று படக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.இருப்பினும்கடந்த , நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியானது. இந்த படத்தின் டீஸர் வெறும் 120 நிமிடத்தில் 7.5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. மேலும், இந்த டீஸர் வெளியான 3 மணி நேரத்தில் 10 மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

இதன் மூலம் குறைவான நேரத்தில் 10மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட யூடுயூப் டீசர் வீடியோ என்ற சாதனையை படைத்தது. இதையடுத்து #MostLikedMasterTeaser என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வந்தனர் விஜய் ரசிகர்கள். தொடர்ந்து பல சாதனைகளை செய்து வரும் மாஸ்டர் படத்தின் டீஸர் சமீபத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டும் 2.4 நம்பர்களால் லைக் செய்யப்பட்டும் சாதனை படைத்தது.

இந்த சாதனையையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அஜய் வர்மா என்ற பிரபாஸ் ரசிகர் ஒருவர், மாஸ்டர் டீசரை பார்க்க ஒவ்வொரு லைக்கிற்கும் விஜய் ரசிகர்கள் 8 ரூபாய் அளிக்கிறார்கள் என்றும் செல் போனில் ரெகார்ட் செய்யப்பட்ட ஸ்க்ரீன் ஷாட் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள். இந்த மாதிரி யூடுயூபில் செய்ய முடியாது என்று கூறினார்கள்.

மேலும், இந்த விஷயம் குறித்து யூடுயூப் பக்கத்தின் அதிகாரபூர்வ கணக்கையும் டேக் செய்து இருந்தனர். இதற்கு பதில் அளித்துள்ள யூடுயூப் நிறுவனம், யூடுயூப் இதுபோன்ற போலித்தனமான லைக்ஸ்களை பெறுவதை அனுமதிக்காது. மேலும், இப்படி பண்ணவும் முடியாது. செயற்கையாக லைக்ஸ்களையோ, வியூஸ்களையோ யூடுயூப் அனுமதிக்காது என்று விளக்கமளித்துள்ளது.

Advertisement