எம்ஜிஆராக விஜய், ஜெயலலிதாவாக சங்கீதா. விஜய் திருமணநாளில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்.

0
1075
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 21 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

- Advertisement -

விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க தீவிர பெண் ரசிகையும் உள்ளார். அதில் ஒருவர்தான் நம்ப சங்கீதா. நேற்று விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளையொட்டி சமூக வளைத்தளத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே போல விஜய் ரசிகர்கள் பல்வேறு கோவில்களில் விஜய் மற்றும் சங்கீதா பெயரில் அர்ச்சனை கூட செய்தனர். ஆனால், மதுரையில் உள்ள ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று அடித்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை முழுவதும் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவியே என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சி தலைவரே என நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை உருவகப்படுத்தும் தோற்றத்தை கணவன்-மனைவி போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement