சிரியலில் நடிக்க இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் – அதுவும் என்ன ரோலில் தெரியுமா.

0
628
- Advertisement -

தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்கள் தயாரித்துள்ளார்.

-விளம்பரம்-

அதோடு பல மெகாஹிட் சிரியல்களையும் தயாரித்துள்ள ராதிகா “சித்தி” போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்பட்ட்ட நிலையில் தான் சமீபத்தில் இவர் சான் டிவியில் இருந்து விளகினார். இதனால் இவருடைய சீரியல்கள் வவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராதிகா சரத்குமார் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கலர்ஸ் டிவியை தேந்தெடுத்தார்.

- Advertisement -

ராதிகா தயாரிப்பு நிறுவனம் :

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கலர்ஸ் டிவி சமீப காலமாக தாங்கள் அணைத்து சிரியல்களும் முடிந்து கிரிக்கெட், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என வேறு பாதையில் போக தொடங்கிய நிலையில் தான் ராதிகாவின் ராடான் தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்ப போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த விஷயம் தொடர்பாக ராடான் டிவியும் விஜய் டிவியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிரியலில் சந்திரசேகர் :

மேலும் இப்படி ஒளிபரப்படம் சீரியல் “சம்சாரம் அது மின்சாரம்” படத்தின் கதையில் இருந்து வெர்ஷனா என்ற சீரியலும், “கிழக்கு வாசல்” படத்தில் இருந்து ஒரு சீரியலும் எடுக்க இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த சிரியலில் நடிக்கும் நடிகர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், இந்த சிரியலில் வரும் நடிகர் விசு போன்ற கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

நான் கடவுள் இல்லை படம் :

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் தான் சமுத்திரக்கனி நடித்திருந்த “நான் கடவுள் இல்லை” என்ற படத்தில் நடித்தும் இயக்கியும் இருந்தார். அப்படம் கடந்த மூன்றாம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் சீரியலில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சீரியல்களின் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்களின் ஆடிஷன் இன்னும் சில நாட்கள் தொடங்கும் என்றும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement