வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு உணவு கொடுத்த விஜய்- ட்ரெண்டிங்கில் வீடியோ

0
455
- Advertisement -

தன்னுடைய வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுக்கு விஜய் உணவளித்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பின் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் விஜய்க்கு ஜூன் 22-ஆம் தேதி 50 ஆவது பிறந்த நாள். இதை கொண்டாட ரசிகர்கள் பலருமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அரசியலுக்கு வந்த பிறகு இதுதான் விஜய் உடைய முதல் பிறந்தநாள். இதனால் இதை சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாட பல திட்டங்களை நிர்வாகிகளும், ரசிகர்களும் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்தில் இருந்தே விஜயின் பெயரில் சோசியல் மீடியாவில் ஹாஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

விஜய் பிறந்தநாள்:

இந்த நிலையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஐந்து திரைப்படங்களை ஜூன் 21-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ் மகன் ஆகிய ஐந்து படங்கள் தான் வெளியாக இருக்கிறது. இதில் மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ஏற்கனவே விஜயின் கில்லி படம் சமீபத்தில் தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது.

விஜய் படங்கள்:

இதுவரை எந்த முன்னணி நடிகர்களின் படமும் செய்யாத அளவிற்கு வசூல் சாதனையை கில்லி செய்திருந்தது. குறிப்பாக, 2கே கிட்ஸ்கள் மத்தியில் கில்லி படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருந்தது. வரும் நாட்களில் விஜய்யின் ஐந்து படங்கள் ரீ ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து விஜய் பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் வீடியோ:

இந்த நிலையில் விஜயின் ஒரு பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னை நீலாங்கரையில் உள்ள தன்னுடைய பங்களாவில் விஜய் வசித்து வருகிறார். அங்கு அவர் தான் வளர்க்கும் நாய்க்கு உணவு வைத்திருக்கிறார். இது பழைய வீடியோ தான். இருந்தாலும் தற்போது இதை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த லியோ படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது.

விஜய் திரைப்பயணம்:

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை இந்த நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மோகன், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

Advertisement