தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 முதல் 9-ஆம் தேதி என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அக்டோபர் 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 15-ம் தேதியிலிருந்து தொடங்கிவிட்டது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர் 22ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்து இருந்தது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே 13 ஆயிரத்துக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக –அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : எனக்கு கத பிடிக்கலன்னு சொல்லிட்டாரு – பீசா படத்தை ரிஜெக்ட் செய்துள்ள மங்காத்தா பட நடிகர். வீடியோவ பாருங்க.

Advertisement

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இதற்கிடையில் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றனர்.

விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும். ஆனால், நடிகர் விஜயின் பெயரை மக்கள் இயக்கம் பயன்படுத்தாமல் சுயேச்சையாக போட்டியிடும் என்று நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 120 பேர் சுய போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்த நிலையில் தனது பெயரையோ தனது ரசிகர் மன்றத்தின் பெயரையே பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 பேர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement