எனக்கு கத பிடிக்கலன்னு சொல்லிட்டாரு – பீசா படத்தை ரிஜெக்ட் செய்துள்ள மங்காத்தா பட நடிகர். வீடியோவ பாருங்க

0
6132
Pizza
- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பீட்சா. இந்த படத்தின் மூலம் தான் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், ஆடுகளம் நரேன், ஜெயக்குமார், பூஜா ராமச்சந்திரன், பாபி சிம்மா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாகும். பீட்சா டெலிவரி செய்யும் மனிதன் ஒருவனின் இக்கட்டான சூழ்நிலையில் அவரது வாழ்க்கையில் எவ்வாறு வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படுவது என்பது விளக்குகிறது.

வீடியோவில் 4 : 48 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சிவி குமார் அவர்கள் சமீபத்தில் இந்த படம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் சிவி குமார் அவர்கள் கூறியது, என்னிடம் கதை சொல்ல வந்தவர்களில் ஒருவர் தான் கார்த்திக் சுப்புராஜ்.

இதையும் பாருங்க : உன்னாலே உன்னாலே படத்தில் நடித்த கஜோல் தங்கை – 43 வயதில் நீச்சல் உடையில் கொடுத்துள்ள போஸ்.

- Advertisement -

அவர் என்னிடம் ஜிகர்தண்டா படத்தின் கதையை சொன்னார். இந்த படத்தை எடுப்பதற்கு 5, 6 கோடி ஆகும் என்பதால் அந்த அளவுக்கெல்லாம் என்னிடம் பணம் இல்லை வேண்டும் என்றால் வேறு ஏதாவது ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் என்று நான் சொல்லி விட்டேன். பின் கார்த்திக் என்னிடம் பீட்ஸா கதையை சொன்னார். எனக்கு கதை ரொம்ப பிடித்து விட்டது. உடனே படம் பண்ண முடிவு செய்தோம்.

பிரசன்னாவை முதல்ல நடிக்க வைக்கலாம் என்று பேசினோம். பிரசன்னா முடியாது என்று சொல்லி விட்டார். பிறகு வைபவ்விடம் கேட்டதற்கு அவரும் எனக்கு விருப்பம் இல்லை, கதை பிடிக்கவில்லை என்று சொன்னார். அப்புறம் கதாநாயகி கூட ஓவியா என்று பல பேரிடம் பேசினோம். அதுக்கப்புறம் ரம்யா நம்பீசன் இடம் ஒப்பந்தம் வாங்கினோம். கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணலாம் என்று முடிவு செய்தோம்.

-விளம்பரம்-

கார்த்திக்கு மிகவும் பழக்கமானவர் விஜய் சேதுபதி. பின் என் நண்பர் சித்தார்த்தை வைத்து படம் பண்ணலாம் என்று சொன்னார். நானும் கார்த்திக்கிடம் சொன்னேன் அவரும் சரி என்று சொன்னார். பிறகு அவர் வேணாம் என்று சொல்லி விஜய் சேதுபதியை வைத்து பண்ணலாம் முடிவு செய்தோம். நானும் இயக்குனருக்கு எது விருப்பமோ அதைச் செய்யலாம் என்று நினைத்து விஜய் சேதுபதியை வைத்து நாங்கள் படத்தை எடுத்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் நல்ல வெற்றியை தந்தது. பீட்சா படம் மொத்த தயாரிப்பு ஒரு கோடியே 42 லட்சம் தான். ஆனால், அந்தப் படம் 5,6 கோடிக்கு மேல் நல்ல வசூலையும் தந்தது என்று கூறினார்.

Advertisement