தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பின் விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும், செய்து வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருந்தார்

Advertisement

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக கிட்டத்தட்ட விழாநடைபெற்றது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார்.மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். அதோடு சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து பேச ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த கூட்டம் பனையூர் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் நிர்வாகிகளை விஜய் சந்தித்து புகைப்படம் எடுத்திருந்தார். மேலும் , காமராஜர் பிறந்த நாளில் இரவு நேர பாடசாலையை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொடங்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், அதற்கான செலவை விஜய் மக்கள் இயக்கமே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில், காமராஜர் பிறந்த நாளான கடந்த 15ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகத்தில் 14 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தளபதி விஜய் பயிலகம்’ என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது.சென்னையில் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் நடைபெற்ற இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்கபொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்கலந்து கொண்டு, பாடசாலையை தொடங்கி வைத்தார்.

Advertisement

இந்த பாடசாலை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தற்போது, இந்த பயிலகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் மட்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் பாட சாலையில் பயிலும் மாணவர்களின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு மாணவன், புத்தகத்திற்கு பதிலாக எதுவும் எழுதப்படாத நோட் ஒன்றை வைத்து படித்துள்ளார். இதனை கண்டு நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement