15 வருடங்களுக்கு பின்னர் விஜய் படத்தில் இணையும் விஜய்யின் நெருங்கிய நண்பர்.!

0
18320
vijay
- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.மேலும்,அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார். மேலும், இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது.

-விளம்பரம்-

அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதி’ நடிக்க போகிறார் என்ற தெரிந்தவுடன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் அடுத்த படமான தளபதி 64 படத்திற்கு தயாராகி விட்டார் என்ற தகவல் இணையங்களில் வந்து உள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு என பல நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் அறிவித்தார்கள்.

இதையும் பாருங்க : வெற்றி பெற்றது யார்.! தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த மாற்றம்.!

- Advertisement -

இதனைத்தொடர்ந்து சஞ்சீவ் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ என்ற தொடரின் மூலம் மக்களிடையே அதிகமாக பிரபலமானார்.அதுமட்டும் இல்லாமல் இவர் இளையதளபதி விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்.மேலும், பல திரைப்படங்களில் விஜய்க்கு நண்பனாக நடித்துள்ளார்.அது சந்திரலேகா , நிலவே வா, பத்ரி, புதியகீதை ஆகிய படங்களில் விஜய்க்கு நண்பராக நடித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து 2009ம் ஆண்டு வெளிவந்த ‘பாலைவன சோலை’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். அதற்கு பிறகு சினிமா துறையில் இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. வெள்ளித்திரையை விட்டுவிட்டு சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். சின்னத்திரையில் பல தொடர்களில் சூப்பர் ஹிட்டாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கண்மணி சீரியல் மூலம் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றார். தற்போது விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் “விஜய் 64” படத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் சஞ்சீவ் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது.15 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய நண்பருடன் சஞ்சீவ் நடிக்கும் படமாகும். ,மேலும், இந்த படத்தில் ஸ்ரீமனும் நடிக்கிறார். இதனைத்தொடர்ந்து தற்போது இந்த விஜய் 64 படத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் ரத்தின குமார் அவர்களும் சேர்ந்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.மேலும், இயக்குனர் ரத்தினகுமார் அவர்கள் லோகேஸின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கியவர். மேலும், இவர் விஜய் 64 படத்தில் தன்னுடைய ஸ்கிரீன் பிளேவை சிறப்பாக தர உள்ளார் என்றும், எழுத்தாளர் ஆக பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-
Image result for vijay friends

இப்படத்தின் பூஜை நடைபெற்ற புகைப்படத்தை இணையங்களில் வெளியீட்டாளர்கள் படக்குழுவினர் . மேலும் இந்த பூஜையில் விஜய்யும் கலந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் “தளபதி 64” படம் ஒரு மெகா சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரசிகர்கள் கருத்தை இணையங்களில் தெரிவிக்கின்றனர்.மேலும், ரசிகர்கள் “தளபதி 64” என்ற ஹேஷ்டேக் உருவாக்கி படம் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் முதல் காட்சியே கல்லூரியில் வைத்து எடுக்க போகிறார்கள் என்று தெரியவந்தது. இந்த படத்தில் விஜய் அவர்கள் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியராக நடித்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆரவாரமாக உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement