வெற்றி பெற்றது யார்.! தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த மாற்றம்.!

0
4472
Bigg-Boss-Finalist
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.

-விளம்பரம்-
kamal

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ்.

இதையும் பாருங்க : இறுதி போட்டிக்கு யாரெல்லாம் வர போறாங்க தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்.!

- Advertisement -

இறுதி போட்டியில் ஷெரின், முகென், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் தகுதி பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் முழுக்க படு மும்மரமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு வாக்களித்து வந்தனர். ஹாட் ஸ்டார் மூலமும் மிஸ்டு கால் மூலமும் ரசிகர்கள் வாக்களித்து வந்தனர். நேற்றுடன் வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை 2 மணிக்கு துவங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

Bigg-Boss

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் எண்டிமால் குழுவின் முக்கிய உறுப்பினர், விஜய் டிவி சார்பாக ஒருவர் மற்றும் 5 முக்கிய ஸ்பான்சர்ஸ் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இறுதி போட்டியின் ஷூட்டிங் நாளை மாலை 3 மணிக்கு தான் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று இறுதி போட்டியின் கொண்டாட்டம் மட்டும் எடுக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பொதுவாக ஒரு நாளைக்கு முன்பாக எடுக்கப்பட்ட காட்சிகளை தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புவார்கள். அதே போல இறுதி போட்டியை நேரலை கூட செய்ய மாட்டார்கள். ஆனால், இம்முறை வெற்றியாளர் யார் என்பது வெளியில் கசிந்துவிட கூடாது என்பதற்காக நாளை மாலை தான் இறுதி போட்டிக்கான ஷூட்டிங் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, நாளை மாலை 3 மணி வரை வெற்றியாளர் யார் என்பது கண்டிப்பாக தெரியாது.

இருப்பினும் இன்று மாலை 2 மணி முதல் ஓட்டிங் எண்ணிக்கை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

This image has an empty alt attribute; its file name is image-49.png

இந்த நிலையில் பிக் பாஸ் பட்டத்திற்காக நடைபெற்று வரும் முகென் தான் முதல் இடத்தில் இருந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல தற்போது பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் முகெனுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் மூன்றாவது இடத்தில் சாண்டியும், இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகிறார்கள். எனவே, இந்த சீசனை முகன் தான் வெல்வார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement