20 ஆண்டுகளுக்கு முன் இருந்த ரெய்டு இல்லாத வாழ்க்கை, வேற லெவல் நீங்க – விஜய்யின் கலகல பேச்சு.

0
26827
Master
- Advertisement -

இளையதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சி தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்துநடித்துள்ளனர்.

-விளம்பரம்-
https://twitter.com/MasterOfficiaI/status/1239222011664183297

இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

மேலும், இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது இந்த விழாவில் அனைவரும் பேசிய பின்னர் மேடைக்கு வந்த விஜய், யாரும் எதிர்பாராத வகையில் நடனமாட துவங்கி விட்டார். பின்னர் அனிருத் மற்றும் சாந்தனுவை அழைத்து நடனமாடினார். பின்னர் தனது ஆல் டைம் டைலாக் நண்பா, நம்பி என்று சொல்லி பேச துவங்கினார் விஜய்.

மேலும், இந்த விழாவில் பேசிய தளபதி முதலில் தனது ரசிகர்களுக்கு மன்னிப்பை தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார் அதற்கு முக்கிய காரணமே இந்த இசை நிகழ்ச்சி விழாவில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மேலும் அதற்கான காரணத்தையும் கூறினார். அதில் ரசிகர்கள் இந்த விழாவில் அனுமதிக்கப்படாத இதற்கு காரணம் பிகில் படத்தின் இசை வெளியீட்டின் போது அந்த விழாவிற்கு வெளியே நடந்த பிரச்சனையும் கொரானா வைரஸ் பயம் தான் காரணம் . உங்களின் அனைத்து ஆதரவுக்கும் நன்றி மேலும் ரசிகர்களை அழைக்க முடியாது என்பதில் உங்களுக்கு எவ்வளவு வருத்தமோ அதே வருத்தம் எங்களுக்கும் இருக்கிறது என்று கூறினார்.

-விளம்பரம்-
vijayspeech

மேலும், இந்த விழாவில் ஹைலைட் பேச்சாக பார்த்தால், என்னுடைய படத்தில் ஒரு பாடல் வரும் நீ நதி போலே ஓடிக்கொண்டு இரு நம்மை பிடிக்காதவர்கள் நம் மீது கல் எறிவார்கள். அவர்களை சிரிப்பாலேயே கொல்ல வேண்டும். நம்ம வேலையை நாம் செய்து கொண்டே போக வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் எனில் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும். நண்பர் அஜித் மாதிரி இந்நிகழ்வுக்கு கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன். நன்றாக இருக்கிறதா? விஜய் சேதுபதி எனக்கு பெயரில் மட்டும் இடம் கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்துள்ளார்” என்றார்.

மேலும் நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கே அரசியல் கட்சியினர் சிலர் போராட்டங்களை நடத்தினார்கள் ஆனால் அங்கே விஜய்க்கு ஆதரவாக விஜய்யின் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனை நினைவு கூர்ந்து பேசியுள்ள விஜய் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு வேற லெவல் நீங்க வேற வேற வேற லெவல் என்று கூறியுள்ளார்

தொகுப்பாளர் மேடையில் உள்ள விஜய்யிடம் 20 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த விஜயிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் விஜய், ரெய்டு எல்லாம் இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன் என்றார். வழக்கம் போல விஜய்யின் இந்த பேச்சு பலரையும் கவர்ந்தது.

Advertisement