தன்னுடைய கார் டிரைவர் குறித்து உருக்கமான வீடீயோவை வெளியிட்ட கில்லி பட நடிகர்.

0
1646
gilli

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பெரும்பாலும் படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் தான் நடித்து உள்ளார். தமிழில் தில், கில்லி, குருவி, ஏழுமலை,அனேகன் போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். சமீபகாலமாக இவர் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை. இவர் தற்போது பெங்காலி, மராத்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று உள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அவர்கள் ஃபேஸ்புக்கில் தன்னுடைய கார் டிரைவர் குறித்து எமோஷனலான வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது, நான் இன்று காலை மும்பையிலிருந்து பூனேவுக்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய டிரைவர் என்னிடம் ஒரு கால் செய்ய வேண்டும் என என்னுடைய போன் கேட்டார். போனை வாங்கிய அவர் தன் மகளுக்கு கால் செய்து அவளை எழுந்திருக்க சொன்னார்.

- Advertisement -

அதற்கு அவர் மகள் நான் உங்களை 5 மணிக்கு தானே எழுப்ப சொன்னேன் இப்போது ஏன் எழுப்புகிறீர்கள் என கூறினார். பரவாயில்லை, நீ இப்போது எழுந்து உணவு தயார் செய்துவிட்டு கிளம்பு என அந்த அப்பா சொல்கிறார். உடனே நான் 4 மணிக்கே எழுந்து உணவு தயார் செய்துவிட்டேன். இப்போது பள்ளிக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன் என அந்த குழந்தை சொல்லியது. இதை கேட்டு நாங்கள் அவருடைய மகள் குடும்பத்தை கவனிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்று சந்தோசம் அடைந்தேன். நான் அவரிடம் உங்கள் வீட்டில் யார் எல்லாம் இருக்கிறீர்கள் என கேட்டேன்.

அதற்கு அவர் என்னுடைய 12 வயது மகள் மற்றும் 7 வயது மகன் தான் இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி தான் என்னுடைய மனைவி இறந்துவிட்டார் என்று டிரைவர் கூறினார். அதை அறிந்த பின்பு தான் வாழ்க்கையின் பொறுப்பை அந்த பெண் இந்த வயதிலேயே ஏற்றுக் கொண்டார் என்று தெரிந்து கொண்டோம். அதே நேரத்தில் தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் அப்பாவை கண்டு நான் நெகிழ்ந்து போனேன் என்று அவர் மனம் நெகிழ்வுடன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement